தமிழகத்தில் தற்போது 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் நடைபெற்று வருகிறது. பொது தேர்வில் நிறைய மாணவர்கள் ஆப்சணட் ஆவதாக தகவல்கள் வெளியானது. இந்நிலையில் பொதுத்தேர்வில் மாணவர்கள் ஆப்சண்ட் ஆவது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி விளக்கம் கொடுத்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது, பொதுத்தேர்வில் ஆப்சென்ட் ஆன மாணவர்களில் பலரும் தொழிற்பயிற்சி மற்றும் பாலிடெக்னிக் படித்து வருகிறார்கள். அதன்பிறகு பலர் டிசி வாங்காததால் மாணவர்களின் பெயர்கள் வருகை பதிவேட்டில் இருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் இந்த மாணவர்களின் எண்ணிக்கையை கழித்தால் தான் தேர்வில் எத்தனை மாணவர்கள் ஆப்சென்ட் ஆகியுள்ளனர் என்ற உண்மை விவரம் தெரியவரும் என்று கூறியுள்ளார்.