வங்கி, வாகனப்பதிவு மற்றும் காப்பீட்டுக் கொள்கைகள் ஆகிய பல விதமான முக்கிய சேவைகளை பெற ஆதார் கார்டு முக்கியமான ஆவணமாக செயல்படுகிறது. இதற்கிடையில் ஆதார் கார்டிலுள்ள புகைப்படத்தை மாற்ற விரும்புவோர் கீழ்கண்ட படிகளை கடைப்பிடிக்க வேண்டும்.
# uidai.gov.in என்ற யூஐடிஏஐ-ன் அதிகாரப்பூர்வமான இணையதளத்தை பார்வையிடவும்.
# ஆதார்பதிவு படிவத்தை டவுன்லோடு செய்யவும்.
# தேவையான அனைத்து விபரங்களையும் சமர்ப்பிக்கவும்.
# ஆதார் பதிவு மையத்துக்கு சென்று படிவத்தை சமர்ப்பிக்கவும்.
# உங்களது புது படத்தை மையத்தில் கிளிக் செய்ய வேண்டும்.
# இதற்கு ஜிஎஸ்டி உடன் சேர்த்து ரூபாய்.100 கட்டணமாக செலுத்தவும்.
# அதன்பின் அக்னாலெட்ஜ்மென்ட் ஸ்லிப் மற்றும் யூஆர்என் எண் கிடைக்கப்பெறும்.
# இந்த யூஆர்என் வாயிலாக உங்களது ஆதார் கார்டின் அப்டேட்டை கண்காணிக்க வேண்டும்
போட்டோ அப்டேட் செய்யப்பட்ட ஆதார்கார்டை பெற 90 நாட்கள் வரை ஆகும். ஆதார் கார்டுக்காக உங்களது புகைப்படத்தை கிளிக் செய்து பெற ஆதார் பதிவு மையத்துக்கு செல்லவேண்டும். அதே நேரம் ஆதார் அட்டையிலுள்ள புகைப்படத்தை ஆன்லைனில் புதுப்பிக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது