தொழிலதிபர்கள், பணக்காரர்கள் செல்ல பிராணிகளை தங்களது வீடுகளில் வளர்ப்பதை அதிகளவு விரும்புவர். அதோடு செல்லபிராணிகளுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் வீடுகளிலேயே செய்து கொடுக்கின்றனர். உலகின் பணக்கார நாய் பற்றி நீங்கள் கேள்விப்பட்டு இருக்கிறீர்களா?. இத்தாலியை சேர்ந்த ஒரு வளர்ப்பு நாயின் சொத்து மதிப்பு ரூபாய்.655 கோடியாகும்.
இது ஜெர்மன் ஷெப்பர்டு நாய் ஆகும். இந்த நாய் பாப் பாடகர் மடோனாவின் வீட்டில் சொகுசாக வாழ்கிறதாம். இதனை கவனித்துக்கொள்ள பல்வேறு பணியாளர்கள் இருக்கிறார்கள். வாரிசு இல்லாத லீபென்ஸ்டீன் என்ற பணக்காரர், இறப்பதற்கு முன்பாக சுமார் ரூபாய்.655 கோடி மதிப்பிலான சொத்துக்களை தனது செல்ல நாய்க்கு விட்டுச் சென்றுள்ளார்.