தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியின் தலைமை செயல் அதிகாரி கிருஷ்ணன் ராஜினாமா செய்துள்ளார்.

தூத்துக்குடியை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வரும்  தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி, கடந்த ஒரு வாரத்திற்கு முன்பாக டாக்ஸி டிரைவர் ஒருவருக்கு 9 ஆயிரம் கோடி ரூபாய் அவருடைய அக்கவுண்டிற்கு அனுப்பியது. அவர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார். எப்படி ஒருத்தருடைய அக்கவுண்டில் இவ்வளவு பெரிய பண பரிவர்த்தனை நடந்தது என ஆர்பிஐ  கண்டுகொள்ளவில்லை என கூறி பலரும் சமூக வலை தளங்களில் கருத்து தெரிவித்தனர்.

இந்நிலையில் இன்றைக்கு தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியின் போர்ட் ஆப் டைரக்டரின் மீட்டிங் நடந்தது. இந்த மீட்டிங் முடிந்த பிறகு  செபி என்று சொல்லக்கூடிய ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் ஆப் இந்தியாக்கு அவர்கள் இந்த கடிதத்தை எழுதி இருக்கிறார்கள். தலைமை செயல் அதிகாரி கிருஷ்ணனுக்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் பணிக்காலம் இருக்கக்கூடிய நிலையில், சிஇஓ என்ற தலைமை பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

தன்னுடைய பர்சனல் காரணத்திற்க்காக அவர் விலகுவதாக சொல்லி இருந்தாலும்,  இதற்கு பின்னால் 9 ஆயிரம் கோடி பணம் பரிமாற்ற விவகாரம் தான் இருக்கிறது. ஒரு வங்கி இவ்வளவு பெரிய பரிவர்த்தனையை எப்படி செய்ய முடியும் ? அவர் 21,000 செலவு செய்துவிட்டார். அதை யாரும் எந்த கேள்வி கேட்கவில்லை.  தவறுதலான விஷயத்தில் இது நடந்தால் அவர் இந்த பொறுப்பிலிருந்து நீக்கப்படலாம் என்று தகவல் வெளியான நிலையில்,  தற்போது அவர் ராஜினாமா செய்துள்ளார்.