மகாராஷ்டிரா மாநிலம் ஜல்னா (Jalna) மாவட்டத்தில் உள்ள சம் தானா கிராமத்தைச் சேர்ந்த பரமேஸ்வர் என்பவர் கடந்த மாதம் திடீரெனக் காணாமல் போனார்.
பல நாட்கள் கழித்து, அப்பகுதியில் உள்ள அணையில் இருந்து மீட்கப்பட்ட உடல், பரமேஸ்வருடையது என்றும், அவர் கொலை செய்யப்பட்டு அணையில் வீசப்பட்டதும் விசாரணையில் தெரியவந்தது.
பரமேஸ்வரின் மனைவி மனிஷா (25), தனது கணவர் காணாமல் போனதாக முதலில் போலீசில் புகார் அளித்து நாடகம் ஆடியுள்ளார். ஆனால், போலீசாரின் தீவிர விசாரணையில், மனிஷாவுக்கும், தன் கணவரின் இளைய சகோதரர் தியானேஸ்வருக்கும் இடையே கள்ளக்காதல் இருந்தது அம்பலமானது.
இவர்களின் கள்ளக்காதலுக்குப் பரமேஸ்வர் எதிர்ப்பு தெரிவித்ததால், இருவரும் அவரைக் கொலை செய்யத் திட்டமிட்டுள்ளனர். அதன்படி, கடந்த மாதம் 15ஆம் தேதி இரவு, தியானேஸ்வர் தன் அண்ணன் பரமேஸ்வரை கல்லால் தாக்கியுள்ளார், அதேசமயம் மனிஷா ஒரு துணியால் கழுத்தை நெரித்துள்ளார்.
இருவரும் சேர்ந்து பரமேஸ்வரைக் கொன்று, பின்னர் அவரது உடலைப் பாலிதீன் பையில் சுற்றி, கல்லைக் கட்டி அணையில் வீசியுள்ளனர். இதையடுத்து, போலீசார் மனிஷா மற்றும் கள்ளக்காதலன் தியானேஸ்வர் இருவரையும் கைது செய்தனர்.
