உத்தரப் பிரதேச மாநிலம் ரேபரேலி (Rae Bareli) மாவட்டத்தில், ஒரு ‘மது அடிமை’ குரங்கின் செயல்பாடு அப்பகுதி மக்களிடையே ஆச்சரியத்தையும், தொந்தரவையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்தக் குரங்குக்கு மது அருந்தும் பழக்கம் ஏற்பட்டுள்ளதாகவும், இது மதுக் கடைகளுக்குள் அத்துமீறி நுழைந்து மதுபானங்களை அல்லது பீர்களைத் திருடிச் செல்வதாகவும் கூறப்படுகிறது.

சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் வீடியோவில், அந்தக் குரங்கு ஒரு பீர் கேனை நேரடியாக வாயில் வைத்து மொத்தமாக அவசரமாகக் குடிப்பதைக் காணலாம்.

மேலும், இந்தக் குரங்கு மதுக்கடைகளுக்கு வருபவர்களிடமிருந்து மதுபாட்டில்கள் மற்றும் பீர் கேன்களைப் பறித்துக் கொண்டு ஓடிய பல சம்பவங்களும் அரங்கேறியுள்ளன. இந்தக் குரங்கின் சேட்டை ரேபரேலியில் உள்ள மதுப்பிரியர்கள் மத்தியில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.