கேரளாவில் உள்ள பகுதியில் டி.கே ஆல்பின் (21) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று கோழிக்கோடு கடற்கரைக்கு சென்றுள்ளார். அங்கு வைத்து தனது நண்பர்களுடன் சேர்ந்து விளம்பர வீடியோவை படமாக்கி கொண்டுள்ளார். இவர் ஒரு தனியார் கார் டீலர் சார்பாக ஒரு சொகுசு காரின் விளம்பரத்தை படமாக்கி கொண்டிருந்தார். அப்போது திடீரென்று எதிர்பாராத விதமாக அவர் மீது கார் மோதியது.

இதில் பலத்த காயம் அடைந்த அவரை, அவரது நண்பர்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தகவல் தெரிவித்தனர். இது குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதோடு அவர் ரீல்ஸை படம் பிடிக்க பயன்படுத்திய செல்போனையும் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.