
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் பழனிவேல் மகள் லியாலட்சுமி (மூன்றரை வயது) என்ற சிறுமி வசித்து வந்துள்ளார். இவர் அங்குள்ள செயின்ட் மேரிஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் எல்கேஜி படித்து வந்துள்ளார்.
கடந்த 3ம் தேதி பள்ளிக்குச் சென்ற இந்த சிறுமி பள்ளி வளாகத்தில் உள்ள கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்து இறந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அவரது தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன் அடிப்படையில் பள்ளி தாளாளர் எமில்டா, முதல்வர் டோமினிக்மேரி, வகுப்பு ஆசிரியை ஏஞ்சல் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் கைது செய்தனர். இந்நிலையில் அந்த சிறுமி கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்ததால் உயிரிழந்ததாக கூறப்பட்ட நிலையில், ஆசிரியை அடித்ததால் தனது மகள் உயிரிழந்ததாக அவரது பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
அதோடு சிறுமியின் ஆடையில் ரத்தக்கரை இருப்பதாகவும் அவரது தாய் சிவசங்கரி கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து ஆசிரியை அடித்ததால் தான் சிறுமி மயங்கி விழுந்ததாக உடன் இருந்த சக மாணவிகளும் வாக்குமூலம் அளித்துள்ளன. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.