தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் தளபதி விஜய். இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். நடிகர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய். இவர் தமிழ் சினிமாவில் இயக்குனராக வேண்டும் என்று அதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

தற்போது சஞ்சய் குறும்படங்களை இயக்கி வருகிறார். இவர் Pull The Trigger என்ற குறும்படத்தை இயக்கி வந்த நிலையில் அதற்கான ஃபர்ஸ்ட் லுக் அண்மையில் வெளியானது. இந்நிலையில் தற்போது சஞ்சய் இயக்கியுள்ள குறும்படம் தற்போது வெளியாகியுள்ளது. மேலும் இந்த வீடியோ தற்போது ரசிகர்களை கவர்ந்த சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.