கோலியை மேரி மீ என கேட்ட பெண் கிரிக்கெட்டர் மற்றொரு விளையாட்டு வீரருடன் நிச்சயதார்த்தம் செய்து கொண்ட தகவலை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இங்கிலாந்தின் மகளிர் கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் டேனியல் வாட் விராட் கோலியின் ரசிகை ஆவார். டேனியல் 2014 ஆம் ஆண்டு விராட் கோலியை மேரி மீ என கேட்டு ஒரு புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டு அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். இருப்பினும் விராட் கோலி இந்த ட்விட்டுக்கு பதில் அளிக்கவில்லை.

சமீபத்தில் டேனியல் வாட் மற்றும் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் ஆகியோர் டேட்டிங் செய்கிறார்கள் என்று புகைப்படம் வைரல் ஆனது. ஆனால் லண்டனில் கிரிக்கெட் பயிற்சியில் ஏற்பட்ட நட்பு காரணமாக புகைப்படம் எடுத்துக் கொண்டது என அவர் பின்னர் விளக்கம் அளித்தார். இந்த நிலையில் டேனியல் வாட் இங்கிலாந்து மகளிர் கால்பந்து அணியின் கேப்டன் ஜார்ஜியாவுடன் காதலில் விழுந்துள்ளதாகவும் நிச்சயதார்த்தம் செய்து கொண்டதாகவும் தகவலை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.