பாதுகாப்பு கருதியே பலரும் பல கோடி ரூபாய் செலவு செய்து பெரிய அடுக்குமாடி குடியிருப்புகளில் (Appartments) வீடு வாங்குகிறார்கள். ஆனால், அங்கேயும் பாதுகாப்பு இல்லை என்பதை நிரூபிக்கும் விதமாக இந்தச் சம்பவம் நடந்துள்ளது.
கிரேட்டர் நொய்டா வெஸ்ட் பகுதியில் உள்ள ‘லா ரெசிடென்சியா’ (La Residencia) சொசைட்டியின் பி-1 டவரில், ஒரு முதியவர் தனது பேத்தியுடன் லிஃப்ட்டில் ஏறியுள்ளார்.
அப்போது, அடையாளம் தெரியாமல் இருக்க ஹெல்மெட் அணிந்தபடி ஒரு இளைஞன் அவர்களுக்குப் பின்னாடியே லிஃப்ட்டிற்குள் நுழைந்துள்ளான்.
अधिकतर लोग शहरों में सोसाइटी और अपार्टमेंट में घर इसलिए लेते हैं कि वह अमूमन सुरक्षित मानी जाती है।
लेकिन ग्रेटर नोएडा की एक सोसाइटी का हाल देखें। किस तरह लिफ्ट में घुसकर लूटपाट कर आराम से निकल गया।
दिल्ली एनसीआर में ऐसा क्राइम इस कदर बढ़ता जा रहा है कि लोग डरने लगे हैं pic.twitter.com/XKd5Spfc8Y— Narendra Nath Mishra (@iamnarendranath) January 8, 2026
லிஃப்ட் கதவு மூடிய அடுத்த நொடியே, அந்த நபர் பாய்ந்து சென்று பாட்டியின் கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியைப் பறிக்க முயன்றான். எதிர்பாராத இந்தத் தாக்குதலால் நிலைகுலைந்தாலும், அந்தப் பாட்டி தைரியமாகச் சத்தமிட்டு அவனிடம் இருந்து தப்பிக்கப் போராடினார்.
பாட்டியின் அலறல் சத்தத்தைக் கேட்டதும் பயந்துபோன அந்தத் திருடன், லிஃப்ட் கதவு திறந்ததும் தப்பியோடிவிட்டான். “மாதம் தோறும் ஆயிரக்கணக்கில் பராமரிப்புத் தொகை (Maintenance) கட்டியும், ஹெல்மெட் அணிந்த ஒரு அந்நிய நபர் செக்யூரிட்டிகளையும் மீறி எப்படி உள்ளே வந்தான்?” என அந்த குடியிருப்பு வாசிகள் கொந்தளித்து வருகின்றனர். இது குறித்த சிசிடிவி காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி பலரையும் பீதியடையச் செய்துள்ளது.
