பொதுவாக பிரேக் டவுன் ஆகின்ற கார்கள், ஆட்டோ மற்றும் பேருந்துகள் போன்றவற்றை தள்ளி செல்வதை பார்த்திருப்போம். ஆனால் திடீரென நடுவழியில் நின்ற ரயிலை தள்ளி செல்வதை பார்த்துள்ளீர்களா. ஆம் அப்படிப்பட்ட ஒரு சம்பவம் தான் தற்போது நடந்துள்ளது. அதாவது உத்திரபிரதேச மாநிலத்தில் பிஜ்நோர் என்ற பகுதி உள்ளது. இங்கு ஒரு ரயில் பழுதாகி நின்ற நிலையில் பராமரிப்பு பணிகளுக்காக ரயில்வே ஊழியர்கள் அதனை தள்ளி சென்றுள்ளனர்.
இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் நிலையில் பலரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். மேலும் இதே போன்று ஒரு சம்பவம் உத்திரபிரதேசத்தில் முன்னதாகவும் நடைபெற்றுள்ளது. அதாவது இந்த வருடம் மார்ச் மாதம் அமேதி மாவட்டத்தில் ஒரு ரயில் திடீரென சென்று கொண்டிருந்தபோது நடுவழியில் நின்றது. அந்த ரயில் திடீரென பழுதாகி நின்றதால் மெயின் லைனில் இருந்து லூப் லைனுக்கு ஊழியர்கள் அதனை தள்ளி சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
अब रेल को भी धक्के मारकर आगे बढ़ाया जा रहा है। ये Video उत्तर प्रदेश में जिला बिजनौर का है। रेलवे का टावर वैगन खराब हो गया। रेलवेकर्मियों ने धक्का लगाकर उसको आगे बढ़ाया। pic.twitter.com/OnlLljVZLu
— Sachin Gupta (@SachinGuptaUP) September 16, 2024
