
சென்னையில் பணியாற்றி வந்த 38 வயது காவலர் இசக்கி முத்துக்குமார் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர் எழுதி வைத்திருந்த கடிதத்தில், “பிள்ளைகளை நன்றாக படிக்க வையுங்கள்” என அறிவுறுத்தி, தனது இறப்பிற்கு யாரும் காரணம் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். அவரது தற்கொலை கடிதம், குடும்பத்திற்கு மற்றொரு வலியை ஏற்படுத்தியுள்ளது.
இசக்கி முத்துக்குமார் நீண்ட காலமாக பணியிட மாற்றம் கோரியிருந்ததாகவும், அதற்கு பதில் கிடைக்காததால் மன உளைச்சலுக்கு ஆளானதாகவும் கூறப்படுகிறது. இந்த மன அழுத்தம், அவரை தற்கொலைக்கு தள்ளியிருக்கலாம் என கருதப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.