பெங்களூருவில் பர்தா அணிந்த முஸ்லிம் பெண்களை சாலையில் பின்தொடர்ந்து அவர்களை வீடியோ எடுத்து, தனிப்பட்ட வாழ்க்கையை தாக்கி, சமூக அமைதியை பாதிக்கும் வகையில் செயல்பட்ட ஒருவரை பொதுமக்கள் பிடித்து தாக்கப்பட்ட சம்பவம் கடும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. குற்றவாளி, பெண்கள் ஆடைகள் மாற்றும் அறைகளுக்குள்ளும் வீடியோ எடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சமூக வலைதளங்களில் இந்தச் செய்தி பரவி வரும் நிலையில், பொதுமக்கள் கடும் கோபத்தில் உள்ளனர்.
Bangalore: A man was caught filming and harassing Muslim women in burqas, invading their privacy and spreading a dangerous message in society. Locals helped catch him, and reports suggest he was also filming inside changing rooms. @BlrCityPolice must take strict action and… pic.twitter.com/bO5mqvy34K
— Ilyas (@Ilyas_SK_31) September 16, 2025
இதுகுறித்து ஒருவர் X பக்கத்தில், “@BlrCityPolice @CPBlr உங்கள் குடும்ப பெண்கள் இவ்வாறு உடை மாற்றும் அறைகளில் ரகசியமாக படம் எடுக்கப்பட்டால் ஏற்றுக்கொள்வீர்களா? உடனே இந்த மிருகத்தை பிடித்து சட்டபூர்வமாக கடும் நடவடிக்கை எடுங்கள்!” என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், “@siddaramaiah @DKShivakumar ஆகியோரையும் குற்றவாளிக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொண்டனர்.
பெங்களூரு போலீசார் இந்த விவகாரத்தில் உடனடியாக நடவடிக்கை எடுத்து, குற்றவாளியை கைது செய்து, சமூகத்துக்கு எடுத்துக்காட்டு ஆக்க வேண்டும் என சமூக வலைதளங்கள் முழுவதும் வலியுறுத்தல் அதிகரித்து வருகிறது.
