
செய்தியாளர்களிடம் பேசிய இயக்குனர் வெற்றிமாறன், இயக்குனர் வெற்றிமாறனிடம் இந்தியா பெயரை மாற்றி பாரதம் என வைப்பது குறித்து கேட்ட போது, முக்கியமான கருத்து எல்லாம் இல்ல. எனக்கு இந்தியா என்ற பெயரே போதுமானதாக இருக்கிறது. சரியானதாகவும் இருக்கும். தேசிய விருதுகள் பத்தி எனக்கு… மத்தவங்க பேசுறதுலயும் கொஞ்சம் வேற விதமா கருத்து இருக்கு. நாம ஒரு படத்த ஒரு தேர்வுக்கு அனுப்புறோம் அப்படின்னாலே… அந்த தேர்வுக்குழுவின் முடிவுக்கு நான் கட்டுப்படுகிறேன் என்ற ஒப்புதலோடு தான் நாம அந்த படத்தை அனுப்புறோம்.
அந்த தேர்வுக்குழு சிறந்த தேர்வு குழுவா ? அவங்க தேர்ந்தெடுத்தது சரியா ? தப்பா ? என்பதெல்லாம் அடுத்த கட்டம். ஆனால் நான் ஒரு படத்தை அனுப்புறேன் அப்படின்னா…. இந்த தேர்வு குழுவின் தீர்ப்பு இறுதியானது என்பதை ஏத்துக்கிட்டு தான் படத்தை அனுப்புறோம். அப்படி படத்தை அனுப்பும் போதே அதனுடைய முடிவு என்னவாக இருந்தாலும் அதற்கு நாம உடன்படும்னு சொல்லி தான் அனுப்புறோம்.அப்போ அங்க போனதுக்கு அப்பறம் அந்த படத்திற்கான விருது கிடைக்குது, கிடைக்கல அப்படிங்கறது தேர்வு குழுவினுடைய முடிவு.
ஒரு தேர்வுக்குழுவினுடைய முடிவு நிச்சயமாக ஒரு படத்தினுடைய தரத்தை அல்லது அந்த படத்தினுடைய சமூக பங்களிப்ப தீர்மானிக்கிறது இல்ல. நிச்சயப்படுத்தறதும் கிடையாது. குறிப்பாக ஜெய்பீம் மாதிரியான ஒரு படம். அந்த படம் வந்ததுக்கு அப்புறம் அந்த சமூகத்துக்கு எவ்வளவு விஷயங்கள் நடந்து இருக்கு. எவ்வளவு மாற்றங்கள் நிகழ்ந்து இருந்திருக்கின்றது என்பது அந்த படத்தினுடைய தாக்கம். அந்த படம் என்ன செய்ய வேண்டும் ? என்று அவர்கள் தொடங்கினார்களோ… அதை அந்த படம் செஞ்சிருச்சி. படத்தினுடைய தரத்தை ஒரு தேர்வுக்குழு தீர்மானிக்க முடியாதுங்குறது என்னுடைய கருத்து.
அந்த தேர்வின் குழுவின்னுடைய நடுவர்கள் ஒருவருடைய விருப்பு வெறுப்பு என்பது அந்த குழுவினுடைய விருப்பம் வெறுப்பா இருக்க வேண்டிய அவசியம் கிடையாது. அதேபோல தமிழ்நாட்டிலிருந்து நிறைய படம் போனதுக்காக… நிறைய தமிழ் படங்களுக்கு விருது கிடைக்கனும்னு நினைக்கும் போது, நாம் தமிழ் படங்களுடைய தரத்தையோ, தமிழ் படைப்பாளிகளுமே கேள்விக்கு உட்படுத்த மாதிரி இருக்கு.
தமிழ்நாட்டுல இருந்து தேர்வுக்குழுவுக்கு போய்ட்டாங்க அப்படின்னா விருது வாங்கி கொடுத்துருவாங்கன்னு நினைக்குறீங்க. தெலுங்குல இருந்து ரெண்டு ஜூடி மெம்பெர்ஸ் போயிருக்காங்கன்னா…. தெலுங்குல நிறைய படங்களுக்கு கிடைக்கும்ன்னு கிடையாது. அந்த குழு என்ன தீர்மானிக்கிறாங்களோ…. அதை பொறுத்தது தான். திரும்பவும் அதைத்தான் சொல்லுறேன்… தேசிய விருது தேர்வுகுழு,எந்த தேர்வுக்குழுவாக இருந்தாலும் சரி… அவங்க தேர்ந்து எடுக்காததாலே ஒரு படம் சிறந்த படம் இல்லைனு ஆயிடாது, அவ்ளோதான் என தெரிவித்தார்.