சூப்பர் ஸ்டார் ரஜினியின் “ஜெயிலர்” படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து அப்படத்தின் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் படத்தில் பணியாற்றிய படக்குழுவினருக்கு தங்க நாணயத்தை பரிசாக வழங்கியுள்ளார். இதுதொடர்பான வீடியோ ஒன்றையும் சன்பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக ரஜினி, நெல்சன், அனிருத் ஆகியோருக்கு கார் மற்றும் காசோலை வழங்கப்பட்ட நிலையில், இன்று படத்தில் பணிபுரிந்த 300 ஊழியர்களுக்கு தங்க நாணயம் வழங்கி விருந்து அளித்து அசத்தியுள்ளார் படத்தின் தயாரிப்பாளர் கலாநிதி மாறன்.