நாம் தமிழர் கட்சியின் சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சும்மா ஏதாவது பேசுறது…. மாற்றம் நாங்க தான்,  நாங்க இது பண்ணிட்டோம்… அது பண்ணிட்டோம் என்று…  அதனால் என் அன்புக்குரிய சொந்தங்களே…. அருமை தம்பி – தங்கைகள் உங்களையெல்லாம் பார்க்கும் போது அண்ணனுக்கு ரொம்ப நம்பிக்கையும்,  உற்சாகமும் பிறக்குது. அவன் என்கிட்ட வந்து அண்ணே நாங்க எல்லாம் இருக்கோம் தளர்ந்திடாதீங்க…  நம்பிக்கையை விட்டு போயிடாதீங்க என கேட்குறாங்க…

அப்படிப்பட்ட மரபிலேயே நான் பிறக்கல. நீ கவனிச்சுக்கோ. நான் கருணாநிதி, எம்ஜிஆர்,  ஜெயலலிதாவை பார்த்து அரசியல் செய்ய வந்தவன் இல்லை. நான் செத்தாலும் சரி… என் இனம் வாழ்ந்தால் போதும்னு நின்ன ஒப்பற்ற புரட்சியாளன் பிரபாகரனை பார்த்து அரசியல் செய்ய வந்தவன். அதனால (கூட்டத்தில் ஒரு தொண்டர் வந்த ஒருவர்  ”அண்ணே ஐ லவ் யூ” என்று சொல்ல ) me to என சொன்னார். உறுதியா வெல்லுவோம்.

ஒன்னும் இல்லன்னு பயம் காட்டுவான். அவர் தனியா நிப்பாரு.. கூட்டணி இல்லன்னு சொல்லுவான்… டேய் பெரிய கூட்டணி நான் தான். மக்களை நேசிக்காதவன்… மக்களை நம்பாதவன்… மக்களுக்கு தலைவனாக வர முடியாது. நான் என் மக்களை முழுமையாக நேசிக்கிறேன், முழுமையாக நம்புகிறேன். அதனால் என் மக்களோடு நான் கூட்டணி வச்சிட்டு நிக்கிறேன். தனிச்சு தான் நிற்பேன். என்னைய நீ வந்து… அவங்கள சேர்த்துக்கிட்டா என்ன ? சரி சேர்த்துக்கறேன்…  அவர் எதுக்கு வருவாரு ?  இன்று என் கிட்ட வருவாரு ? நாளைக்கு அவன் கூப்பிட்டா அவன் கிட்ட போவாரு…

என்கூட நிக்குற புள்ளைங்க நாட்டுக்காக  நிக்குறான். என்னைய  நோக்கி வரவங்க சீட்டுக்காக வருவாங்க. நாட்டுக்காக நிற்கிற ஏன் பிள்ளைக்கு சீட்டு கொடுத்துட்டு போறேன்,  அவ்வளவுதானே… நீ என்னைய தோற்கடிக்கிறியா ? இல்லை நீ தோத்து போறியா ? என் மக்கள்தான் தோற்றுப் போகிறார்கள். இந்த மகன் தோற்று போகல,  நான் துணிந்து நிப்பேன்… தைரியமாக நிற்பேன்…

இஸ்லாமியர்கள் –  கிறிஸ்தவர்களை சிறுபான்மைனு சொல்லாத…  சிறுபான்மைனு சொன்னா…  எனக்கு சலுகை கிடைக்கும்னு…. சலுகை வேண்டாம், எனக்கு உரிமை தான் வேண்டும். இந்த சிறுபான்மை மக்கள் இஸ்லாமியர் – கிறிஸ்தவர்கள் ஜிஎஸ்டி 18 விழுக்காடு. இஸ்லாமிய – கிறிஸ்தவருக்கு 10 விழுக்காடுங்க அப்படி வரியில ஏதாவது இருக்கா ? அம்பானி பொண்டாட்டி என்ன வரி கட்டுறாலோ… அதை தான் 100 நாள் வேலைக்கு போற… எங்க ஆத்தாவும் கட்டுறா… வரி ஒண்ணா இருக்கு… வாழ்க்கைத்தரம் ஒண்ணா இருக்கா ?  அப்ப எனக்கு வேண்டியது சலுகை அல்ல,  எனக்கு வேண்டியது உரிமை என ஆவேசமாக பேசினார்.