திமுக தொண்டர்கள் மத்தியில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தெலுங்கானாவில் இருந்து அரசு அதிகாரிகள் ஆசிரியர்கள் எல்லாம்  தமிழ்நாட்டுக்கு வந்திருக்காங்க. எப்படி பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவு திட்டத்தை சாத்தியப்படுத்தினீங்க ? அப்படின்னு பார்க்கிறதுக்காக….  இந்த திட்டத்தை அவங்க மாநிலத்துல விரிவு படுத்துவதற்காக ஆய்வு செய்வதற்காக…

தெலுங்கானாவில் இருந்து வந்த அதிகாரிகள்…. வேறு மாநிலத்தில் இருந்து வந்து நம்மள பாராட்டிட்டு போயிட்டு இருக்காங்க. ஆசிரியர்கள் பாராட்டுறாங்க… மாணவர்கள் பாராட்டிட்டு இருக்காங்க.. மகிழ்ச்சியா இருக்காங்க… பெற்றோர்கள் மனம் குளிர நம்முடைய தலைவரை பாராட்டிட்டு இருக்காங்க…. இதுக்கு முன்னாடி என்ன நிலைமை இருந்தது ?

காலையில பசங்கள ஸ்கூலுக்கு அனுப்பிட்டு பெற்றோர்கள் வருத்தத்தில் இருப்பாங்க… பசியோட  போறானே… காலையில எட்டு மணிக்கு போறானே… நம்மளால சாப்பாடு கொடுள்ள முடியலையே…  படிச்சானா ? பசியில இருப்பானே அப்படின்னு…  அதுவும் குறிப்பாக வேலைக்குப் போகிற மகளிர்…  காலையில் அவங்களும் ஏழரை, 8 மணிக்கு எந்திரிச்சு வேலைக்கு போயிருவாங்க… அவங்க எல்லாம் வருத்தத்துல இருந்தாங்க.

ஆனால் இப்போ எல்லாரும் மனசு குளிர… நம்முடைய குழந்தையை பார்த்துக்கிறதுக்கு நம்முடைய முதலமைச்சர் இருக்கிறார். நம்முடைய குழந்தையை பார்த்துக்கிறதுக்கு திராவிட மாடல் அரசு இருக்குது…  மனம் குளிர பெற்றோர் பாராட்டிட்டு இருக்காங்க இதுதான் திராவிட மாடல் அரசு என தெரிவித்தார்.