தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராகவும் அரசியல்வாதியாகவும் இருப்பவர் சரத்குமார். சமத்துவ மக்கள் கட்சியின் தலைவராக சரத்குமார் இருக்கிறார். இந்நிலையில் இன்று ஈரோட்டில் சமத்துவ மக்கள் கட்சியின் 7-வது பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.

இந்த பொதுக்குழு கூட்டத்தின் போது சரத்குமார் மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியின் தலைவராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். மேலும் கடந்த 2007-ம் ஆண்டு கர்மவீரர் காமராஜர் மற்றும் அப்துல்கலாமின் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு சமத்துவ மக்கள் கட்சி தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.