கேரள மாநிலத்தில் போக்குவரத்து விதிமுறைகளை தடுப்பதற்காக குறிப்பிட்ட இடைவெளியில் சாலைகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இந்த கண்காணிப்புக்கு கேமராக்கள் புகைப்படம் எடுத்து கண்காணிப்பு அறைக்கு அனுப்பி வைக்கும். இதில் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்ட நபர்களை போலீசார் அடையாளம் கண்டு அவர்களின் செல் போன் நம்பருக்கு போட்டோவுடன் ‌ மெசேஜ் அனுப்புவார்கள். அதன் பிறகு அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். இந்நிலையில் சிசிடிவி கேமரா எடுத்த ஒரு போட்டோ வால் தற்போது  இடுக்கி மாவட்டத்தில் ஒரு குடும்பமே பிரிந்துள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.

அதாவது இடுக்கியை சேர்ந்த 32 வயது நபர் ஒரு ஜவுளி கடையில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி 3 வயதில் ஒரு பெண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் அந்த நபர் தன்னுடைய பெண் தோழியுடன் பைக்கில் ஹெல்மெட் அணியாமல் ஊர் சுற்றியுள்ளார். இதுதொடர்பாக போலீசார் அந்த நபரின் மனைவிக்கு போட்டோவுடன் மெசேஜ் அனுப்பி உள்ளனர். மேலும் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த மனைவி வேறொரு பெண்ணுடன் கணவருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்ததால்  கணவர் மீது போலீசில் புகார் கொடுத்துள்ளார். மேலும் சிசிடிவி கேமராவால் ஒரு குடும்பமே பிரிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.