சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் இன்று வெளியாகும் என தகவல்கள் வெளிவந்த நிலையில் தற்போது அது குறித்து சிபிஎஸ்இ நிர்வாகம் விளக்கம் கொடுத்துள்ளது. அதாவது இன்று தேர்வு முடிவுகள் வெளியாகும் என வெளியான அறிக்கை போலியானது என்றும் இன்று தேர்வு முடிவுகள் வெளிவராது எனவும் சிபிஎஸ்இ நிர்வாகம் அறிவித்துள்ளது. 10 மற்றும் 12-ம் வகுப்பு சிபிஎஸ்இ மாணவர்களுக்கு கடந்த பிப்ரவரி மாதம் தேர்வுகள் நடைபெற்றது.
இந்நிலையில் சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் குறித்த அறிவிப்பு cbse.nic.in, cbse.gov.in என்கிற அதிகாரப்பூர்வ இணையதளங்களில் வரும். அதன்பிறகு மாணவர்களின் செல்போன் நம்பருக்கு குறுஞ்செய்தி வழியாக தேர்வு முடிவுகள் அனுப்பப்படும். டெல்லியை சேர்ந்த மாணவர்கள் 24300699 என்கிற நம்பருக்கும் டெல்லிக்கு வெளிப்புறத்தில் உள்ள மாணவர்கள் 011-24300699 என்கிற தொலைபேசி நம்பருக்கும் தொடர்பு கொண்டு தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.