
நீதிமன்ற விசாரணையின் போது நீதிபதி கேட்ட கேள்வி இணையத்தில் வைரலான நிலையில் கடும் விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது. அதாவது குற்றவியல் நீதிமன்றத்தில் விவாகரத்து தொடர்பான வழக்கில் விசாரணை நடந்து கொண்டிருந்தது. அந்த வழக்கில் டாக்டர் ஒருவர் நிலையான வருமானம் இல்லாமல் திருமணம் செய்தால் சந்தர்ப்ப சூழ்நிலையால் விவாகரத்து கோரி மனு கொடுத்திருந்தார்.
அந்த வழக்கு தற்போது நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில் அந்த டாக்டர் zoom வீடியோ கால் மூலம் விசாரணைக்கு ஆஜரானார் . அப்போது நீதிபதி உண்மையில் உங்களுக்கு வேலை இல்லாமல் இருந்திருந்தால் எதற்கு திருமணம் செய்தீர்கள்..? என்று கேட்டார். அதோடு உங்களைப் போன்ற டாக்டர்களுக்கு வேலை இல்லை என்றால் திருமணம் செய்யக்கூடிய உரிமை இல்லை. அந்த உரிமை வழக்கறிஞர்களுக்கு மட்டும் தான் இருக்கிறது என்று கூறினார். நீதிபதியின் இந்த கேள்வி அங்கிருந்தவர்களை சிரிக்க வைத்தாலும் தற்போது இணையதளத்தில் வீடியோவாக வைரலாகி வரும் நிலையில் கடும் எதிர்ப்புக்குள்ளாகி உள்ளது.
Why did you get married without any income? pic.twitter.com/iwqf0K5Sea
— ShoneeKapoor (@ShoneeKapoor) April 1, 2025
அதாவது திருமணம் செய்ய நிலையான வருமானம் இருக்க வேண்டும் என்பதற்கு ஏதாவது சட்டம் இருக்கிறதா..? என்று பலரும் கேள்வி எழுப்பி உள்ளனர். மேலும் நீதிபதி இந்த கருத்தை ஒரு நகைச்சுவையாக கூறியிருந்தாலும், இது நீதிமன்றத்தின் முறையான நடைமுறைகளுக்கு எதிராக கருதப்படும் என சட்ட வல்லுனர்களும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இந்த சம்பவம் தற்போது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.