சிரியாவில் இடிபாடுகளுக்கு இடையே இருந்து மீட்கப்பட்ட சிறுவன் மீட்பு பணியாளர்களிடம் சிரித்துக்கொண்டே மகிழ்ச்சியை வெளிப்படுத்திய வீடியோ காண்போரை மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகிறது. 1999 ஆம் ஆண்டு 7.4 பதிவான நிலநடுக்கம் வரலாற்றில் ஏற்பட்ட மோசமான நிலநடுக்கமாக கருதப்படும் நிலையில் 7.8 ஹெக்டேர் அளவில் தற்போது பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கத்தால் இதுவரை 15000 மேற்பட்டோர் உயிரிழந்ததாக தகவல் கூறுகின்றனர்.

இந்த நிலையில் இருப்பார்கள் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. பெரியவர்கள் தொடங்கி சிறு குழந்தைகள் வரை இடுப்பாடுகளில் இருந்து ஒவ்வொரு நொடியும் மக்கள் மீட்கப்பட்டு வரும் நிலையில் இது குறித்த புகைப்படங்களும் வீடியோக்களும் வெளியாகி காண்போரை பதப்பதைக்க வைத்து வருகின்றது.

இந்நிலையில் இவற்றிலிருந்து மாறுபட்டு இடிபாடுகளுக்கு இடையில் இருந்து மீட்கப்பட்ட சிறுவன் ஒருவனின் வீடியோ நம்மை மகிழ்ச்சியில் அழ்த்தியுள்ளது. இடிபாடுகளில் சிக்கியிருந்த இந்த குழந்தை இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்ட வீடியோ வைரலாகி வருகின்றது. இடிந்த வீடு ஒன்றிலிருந்து கரண் என்ற இந்த சிறுவன் மீட்கப்படுவது, மீட்கப்பட்ட சிறுவன் மீட்பு குழுவினரை அணைத்துக் கொள்வது, அவர்கள் விளையாடுவது என உணர்வுபூர்வமான காட்சிகள் நம் கண்களை கலங்க வைக்கிறது. இந்த வீடியோ இணையவாசிகளின் இதயத்தை வென்றுள்ளது.