
உடலில் ஏற்படும் காயங்கள் குணமடைவதை 30 சதவீதம் வேகப்படுத்த உதவும் E-bandage என்ற மின்னணு கருவியை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இது தொடர்பான ஆய்வு முடிவுகள் மருத்துவ இதழ் ஒன்றை வெளியாகி உள்ளது. இதன்படி இரண்டு எலிகளுக்கு காயத்தை ஏற்படுத்தி அவற்றில் ஒன்றிற்க்கு புதிய பேண்டேஜ் பொறுத்தி உள்ளனர். மற்றொரு எலியை அப்படியே விட்டுள்ளனர். இதில் குறிப்பிட்ட நாளில் E-bandage பொருத்தப்பட்ட எலி வேகமாக குணமடைந்தது தெரிய வந்தது.
நீரழிவு நோயாளிகளுக்கு ஏற்படும் காயங்கள் விரைவில் ஆறுவது இல்லை. அவை பல்வேறு பிரச்சினைகளை உருவாக்குகிறது. காயங்களை குணப்படுத்த சிரமப்படுகின்றனர். இந்த நிலையில் இந்த புதிய கருவியை நீரழிவு நோயினால் ஏற்படும் காயங்களை ஆற்ற உதவ முக்கிய பங்கு வகிக்கும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கான செலவும் குறைவாகவும் பயன்படுத்துவதற்கும் எளிதானதாக இருக்கும் என தெரிவிக்கின்றனர். இந்த கருவி காயங்களை மூடிவிடும் என்பதால் தொற்று ஏற்படுவதையும் தடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.