சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய பவுலர் முகேஷ் சவுத்ரி. இவர் நடப்பு ஐபிஎல் போட்டியில் காயம் காரணமாக விளையாடுவது கடினம் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன் கூறியுள்ளார். இது குறித்து மேலும் அவர் கூறியதாவது, கடந்த வருடம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தூண்களில் ஒருவராக இருந்த முகேஷ் சவுத்ரி முடிவுக்காக நாங்கள் காத்திருக்கிறோம்.

ஆனால் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. அவர் அணியில் இல்லை என்றால் அது துரதிஷ்டவசமானது என்று கூறியுள்ளார். மேலும் கடந்த ஐபிஎல்லில் 13 போட்டிகளில் முகேஷ் சவுத்ரி 16 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.