
கர்நாடக மாநிலம் கொப்பல் மாவட்டத்தைச் சேர்ந்த அம்ரீஷ் கும்பர் என்பவர் வசித்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த ஷோபம்மா ஹரிஜன் என்ற பெண் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான பசு ஒன்று அம்ரிஷ் கும்பரின் நிலத்திற்கு சென்றுள்ளது. இதனால் கோபமடைந்த கும்பர் ஷோபம்மாவின் மாட்டை பிடித்து தனது வீட்டின் அருகே கட்டி வைத்துள்ளார்.
இதனையடுத்து ஷோபம்மா அவரது பசுவை மீட்பதற்காக கும்பர் வீட்டிற்கு சென்றுள்ளார். ஆனால் அவர் ஷோபம்மாவை கட்டி வைத்து செருப்பால் அடித்து கொடூரமாக தாக்கியுள்ளார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து தகவல் அறிந்த போலீசார் கும்பர் மீது பட்டியல் சாதி மற்றும் பழங்குடியினர் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.