
லூதியானா நீதிமன்ற வளாகம் அருகே 2 பேர் துப்பாக்கியால் சுட்டதில் ஒருவர் காயமடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது..
பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள நீதிமன்ற வளாகம் அருகே துப்பாக்கி சூடு நடந்துள்ளது. 2 பேர் துப்பாக்கியால் சுட்டதில் ஒருவர் படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். துப்பாக்கி சூடு தொடர்பாக இரண்டு பேரை போலீஸ் தேடி வருகிறது.
இதுகுறித்து ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் ட்விட்டரில், லூதியானா, பஞ்சாப் கோச்சார் மார்க்கெட் பக்கம் அருகே லூதியானா நீதிமன்ற வளாகத்திற்கு வெளியே துப்பாக்கி சூடு சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது. இச்சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மூன்று தோட்டாக்கள் சுடப்பட்டன. குற்றம் சாட்டப்பட்டவர் தலைமறைவாக உள்ளார், விசாரணை நடந்து வருகிறது. ஒருவர் காயம் என ஏசிபி சுமீத் சூட் தெரிவித்துள்ளார்..
Ludhiana, Punjab | A firing incident came to light outside Ludhiana court premises near Kochhar Market side. There was a stir after the incident. Three bullets were shot. The accused is absconding, investigation underway. One person is injured: Sumeet Sood, ACP pic.twitter.com/I5WaopYDr2
— ANI (@ANI) February 7, 2023