இரண்டு தலை உடைய எறும்பு தின்னி அனேக பேரின் கவனத்தை ஈர்த்து வருகின்றது. எறும்பு உன்னி, அழுங்கு என்று பல்வேறு பெயர்களால் குறிப்பிடப்படும் பாலூட்டி இனத்தைச் சேர்ந்த எறும்புத்தின்னி புற்றுகளில் உள்ள கரையான்களையும் எறும்புகளையும் ஈசல்களையும் மட்டுமே தின்பதால் எறும்பு தின்னி என குறிப்பிடப்படுகின்றது.

இந்தியாவில் பாறை இடுக்கைகளிலும் மரப்பொந்துகளிலும் வாழும் இவை இருட்டிய பின்பே இறைத் தேட செல்லும். அந்த வகையில் இறை தேட சென்ற ஒரு எறும்பு தின்னிக்கு இரண்டு தலைகள் இருப்பதை படம்பிடித்த ஒருவர் வலைதளத்தில் அதனை பகிர்ந்துள்ளார். மரபணு குறைபாட்டால் இரண்டு தலையுடன் பிறந்துள்ள அந்த எறும்பு தின்னி இறையுண்ணும் வீடியோ சமூக ஆர்வலர்களின் கவனத்தை கவர்ந்து வருகின்றது.

தனது மோப்ப சக்தியால் ஐந்து மீட்டர் ஆழத்தில் உள்ள எறும்பு தின்னிகளை கண்டறிந்து உண்ணும் இந்த எறும்பு தின்னிகள் பயந்த சுபாவம் கொண்டவை. எதிரிகளைக் கண்டால் உடம்பை பந்து போல் சுருட்டி வைத்துக் கொள்ளும். தனிமை விரும்பியானா எறும்பு தின்னிகள் கோடை காலத்தில் மட்டுமே ஆணும் பெண்ணும் ஒன்று கூடும்.