பிப்ரவரி 1-ம் தேதி நாடாளுமன்றத்தில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2023 -2024 -ஆம் நிதி ஆண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். 2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக தாக்கல் செய்யப்படும் இறுதி முழு பட்ஜெட் இதுதான். இதில் வருமான வரி ஸ்லாப் மாற்றம், கடன்கள் தள்ளுபடி மற்றும் வரிசலுகைகள் என ஒவ்வொரு தரப்பு மக்களும் எதிர்பார்ப்புகளோடு காத்திருக்கின்றனர். இந்நிலையில் இந்திய அரசியலமைப்பு சட்டம் சரத்து 112 படி சமர்ப்பிக்கப்படும் பட்ஜெட் இது ஒரு பெரிய செயல்முறை சிக்கலின் மிகச்சிறிய கூறை குறிக்கும். யூனியன் பட்ஜெட்டின் மற்றொரு பெயர் வருடாந்திர நிதிநிலை அறிக்கையாகும். இந்த வருடாந்திர நிதிநிலை அறிக்கை வெளியிடப்படுவதற்கு முன்பாக மற்றொரு முக்கிய ஆவணம் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது. இது முதன்மையாக இந்திய பொருளாதாரத்தின் நிலையை எடுத்துக்காட்டுகிறது. மேலும் ஆவணத்தின் பெயர் இந்திய பொருளாதார ஆய்வு அறிக்கை என்பதாகும்.

பொருளாதார ஆய்வு அறிக்கை என்றால் என்ன.?

மத்திய பட்ஜெட்டை போலவே பொருளாதார ஆய்வு அறிக்கையும் மத்திய நிதி அமைச்சகத்தால் தயார் செய்யப்படுகிறது. மேலும் அமைச்சகத்தின் கீழ் உள்ள பொருளாதார விவகாரங்கள் துறை இந்த கணக்கெடுப்பை விரிவாக ஆராய்கிறது.

பொருளாதார ஆய்வில் நோக்கம் என்ன.?

இந்திய பொருளாதார ஆய்வு இந்திய பொருளாதாரத்தின் நிலை நிதி வளர்ச்சிகள் மற்றும் பண மேலாண்மை மற்றும் மற்ற துறைகளின் வளர்ச்சி நிலைகளை பரந்த அளவில் ஆராய்ந்து தயாரிக்கப்படுகிறது. மேலும் பொருளாதார ஆய்வு முந்தைய ஆண்டில் பொருளாதாரத்தில் நிலையை மதிப்பாய்வு செய்கிறது. அதே சமயம் எதிர்காலத்தில் முக்கிய வாய்ப்புகளை குறிப்பிட்டு காட்டுகிறது. இது தேவையான முக்கிய கொள்கை முடிவுகளுக்கு முன்னோடியாக அமைவது மட்டுமல்லாமல் பொருளாதாரத்தின் பல்வேறு துறைகளில் விரிவான புள்ளி விவர தரவு மூலம் முந்தைய முடிவுகளின் தாக்கத்தை மதிப்பிடுகிறது. இதனை இன்னும் தெளிவாக கூற வேண்டும் என்றால் இது மூன்று நிதி ஆண்டு பட்ஜெட்டுகளுக்கு ஈடானது. தற்போது இந்த நிதியாண்டு வெளியிடப்படும் பொருளாதார ஆய்வு அறிக்கையில் 2022 -2023 ஆம் ஆண்டுக்கான மதிப்பாய்வு 2024 – 2025 ஆம் ஆண்டுக்கான எதிர்கால திட்டங்கள் போன்ற இரண்டையும் அடிப்படையாக வைத்து வரையறுக்கப்படும் 2023- 2024 காண பட்ஜெட் கொள்கைகள் அடங்கும்.

பொருளாதார ஆய்வு அறிக்கை சமர்ப்பிக்கப்படுவது எப்போது.?

இந்த ஆவணம் பட்ஜெட் கூட்டத்தொடரின் போது மத்திய பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு ஒரு நாள் முன்னதாக பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் சமர்ப்பிக்கப்படுகிறது. இது இந்தியாவின் தலைமை பொருளாதார ஆலோசகரின் வழிகாட்டுதலின் கீழ் தயாரிக்கப்பட்டு விட்டது.

பொருளாதார ஆய்வறிக்கையை முன் வைப்பது யார்.?

பொருளாதார ஆய்வு அறிக்கை நிதி அமைச்சர் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்கிறார். நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த ஆண்டு 2021- 2022 ஆம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வு அறிக்கை ஜனவரி 31-ஆம் தேதி சமர்ப்பித்துள்ளார். இந்த வருடமும் நாடாளுமன்றத்தில் ஜனவரி 31 -ஆம் தேதி சமர்ப்பிப்பார். 1950 -1951இல் இந்தியாவின் முதல் பொருளாதார ஆய்வு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. இதனையடுத்து 1964-ஆம் ஆண்டு வரை இந்த ஆவணம் யூனியன் பட்ஜெட் உடன் சமர்ப்பிக்கப்பட்டது. அதன் பின் அது பிரிக்கப்பட்டு பட்ஜெட் அறிவிப்புக்கு முன் வழங்கப்பட்டது.