2ஆவது ஒருநாள் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இன்று மோதுகின்றன..
நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரின் 2வது போட்டி இன்று லக்னோவில் நடைபெறுகிறது. இதில் வெற்றி பெற வேண்டும் என்ற கட்டாயத்துடன் இந்திய அணி களம் இறங்குகிறது. முதல் போட்டியில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் இந்திய அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால், பிளேயிங் லெவனில் மாற்றம் இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
கடந்த போட்டியில் முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக செயல்பட்டனர். 3வது ஓவரில் சாப்மேன் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அவரைத் தவிர, பேட்டிங் பிரிவில் ஃபின் ஆலன் 35, கான்வே 52, கிளென் பிலிப்ஸ் 17, டேரில் மிட்செல் 59 ரன்கள் எடுத்து அணியின் ஸ்கோர் உயர உதவினார்கள்.
குறிப்பாக டேரில் மிட்செல் 30 பந்துகளில் 5 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 59 ரன்கள் குவித்தார். இந்திய பந்துவீச்சில் வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ் தவிர மற்றவர்கள் ரன்களை வழங்கினர். அர்ஷ்தீப் சிங் 4 ஓவர்களில் 51 ரன்கள் கொடுத்தார். உம்ரான் மாலிக் ஒரே ஓவரில் 16 ரன்கள் கொடுத்தார். கேப்டன் பாண்டியா 3 ஓவரில் 33 ரன்கள் விட்டுக்கொடுத்தார். பேட்டிங்கைப் பொறுத்த வரையில் இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் சப்மன் கில் 7, இஷான் கிஷன் 4, ராகுல் திரிபாதி 0, தீபக் ஹூடா 10 ரன்களுடன் மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
இஷான் கிஷான் கடந்த 7 டி20 போட்டிகளில் 37, 2, 1, 5, 8, 17, 4 ரன்கள் எடுத்துள்ளார். அதே போல தீபக் ஹூடாவின் ஆட்டமும் ஏமாற்றம் அளிக்கிறது. இந்த இரு வீரர்களுக்கு பதிலாக மாற்று வீரர்களுக்கு இன்று வாய்ப்பு அளிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. எனவே இன்று கட்டாயம் வெற்றி பெற வேண்டும் என்பதால் கேப்டன் பாண்டியா மீதான அழுத்தம் இயல்பாகவே அதிகரித்துள்ளது. ஆடும் லெவனில் மாற்றம் இருக்குமா என்பது பற்றி தெரியவில்லை.. முதல் போட்டியில் ஆடிய அதே வீரர்கள் ஆடவே வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
நியூசிலாந்து டி20 போட்டிக்கான இந்திய அணி :
ஹர்திக் பாண்டியா (கே), சூர்யகுமார் யாதவ் (து.கே), இஷான் கிஷன் (வி.கீ), ருதுராஜ் கெய்க்வாட், ஷுப்மான் கில், தீபக் ஹூடா, ராகுல் திரிபாதி, ஜிதேஷ் சர்மா (வி.கீ.), வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், அர்ஷ்தீப் சிங், உம்ரான் மாலிக் , சிவம் மாவி, பிருத்வி ஷா, முகேஷ் குமார்.
இந்தியா (சாத்தியமானது) :
1 ஷுப்மான் கில், 2 இஷான் கிஷன் (வி.கீ), 3 ராகுல் திரிபாதி, 4 சூர்யகுமார் யாதவ், 5 ஹர்திக் பாண்டியா (கேப்டன்), 6 தீபக் ஹூடா, 7 வாஷிங்டன் சுந்தர், 8 சிவம் மாவி, 9 குல்தீப் யாதவ், 10 உம்ரான் மாலிக் , 11 அர்ஷ்தீப் சிங்.
நியூசிலாந்து (சாத்தியமானது) :
1 ஃபின் ஆலன், 2 டெவோன் கான்வே (வி.கீ), 3 மார்க் சாப்மேன், 4 கிளென் பிலிப்ஸ், 5 டேரில் மிட்செல், 6 மைக்கேல் பிரேஸ்வெல், 7 மிட்செல் சான்ட்னர் (கேப்டன்), 8 இஷ் சோதி, 9 லாக்கி பெர்குசன், 10 ஜேக்கப் டஃபி, 11 பிளேயர் டிக்னர்.
