சென்னையைச் சேர்ந்த பிரபல ஜெம் கிரானைட்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் வீரமணி (85) மற்றும் அவரது கூட்டாளிகள் மீது குழந்தைகள் பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதமே இந்தச் குற்றச்சாட்டு தொடர்பான காணொளி ஆதாரங்கள் அரசுக்கு வழங்கப்பட்ட போதிலும், கடந்த 11 மாதங்களாக உரிய நடவடிக்கை எடுக்கப்படாமல் தாமதப்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் அரசியல் அரங்கில் கடுமையான விவாதங்களை எழுப்பியுள்ளன.

முன்னாள் காவல் துறை ஆணையர் அருண் மற்றும் சில உயரதிகாரிகள் இந்த வழக்கை முடிக்க முயன்றதாகவும், அப்போது உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கிடையே, சிறப்பு போக்சோ நீதிமன்றம் காவல்துறையின் வழக்கினை முடித்துவைக்கும் கோரிக்கையைத் தள்ளுபடி செய்து, புதிய ஆணையர் அமல்ராஜ் மூலமாக உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது.

நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் உடனடியாகச் செயல்பட்ட புதிய காவல் துறை ஆணையர் அமல்ராஜ் ஐ.பி.எஸ்., குற்றவாளி வீரமணி மற்றும் உடந்தையாகச் செயல்பட்ட சாந்தி, மகேந்திரன் ஆகியோரைக் கைது செய்துள்ளார்.

கடந்த 2003-ஆம் ஆண்டு முதல் இயங்கி வந்ததாகக் கூறப்படும் இந்தக் குற்ற வலையமைப்பைக் கண்டறிந்து, தற்போது தவெக அரசு வெளிப்படையான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதை சமூக ஆர்வலர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.

இந்த விவகாரத்தில் குற்றவாளிகளுக்குச் சட்டத்தின்படி உரிய தண்டனை பெற்றுத் தருவதுடன், பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு நீதி கிடைக்கும் வரை இந்தச் செய்தியைக் தொடர்ந்து பேச வேண்டியது அவசியமாகும்.

“>

 

முந்தைய ஆட்சிக்காலத்தில் மறைக்கப்பட்டதாகக் கூறப்படும் இந்தத் திடுக்கிடும் உண்மைகள் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ள நிலையில், தவறு செய்தவர்கள் எங்குள்ள தப்பிக்க முடியாது என்பதை இந்த அதிரடி நடவடிக்கை உறுதிப்படுத்தியுள்ளது.