கேரள மாநிலம் அருகே திருமண விழாவிற்குச் சென்ற பயணிகளுடன் பயணித்த சுற்றுலா பஸ் ஒன்று திடீரெனக் கட்டுப்பாட்டை இழந்து பெட்ரோல் பங்கிற்குள் கவிழ்ந்து புகுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நல்வாய்ப்பாகப் பெட்ரோல் விநியோக எந்திரங்கள் மீது பஸ் மோதாததால் மிகப்பெரிய வெடிப்பு விபத்து தவிர்க்கப்பட்டது.
கூத்தாட்டுக்குளம்-பிறவம் பிரதான சாலையில் மழை பெய்து கொண்டிருந்த போது, பஸ்சிற்கு முன்னால் சென்றுகொண்டிருந்த ஒரு ஸ்கூட்டர் ஓட்டி எவ்வித சிக்னலும் கொடுக்காமல் திடீரென வலதுபுறமாகத் திருப்பியுள்ளார். ஸ்கூட்டர் மீது மோதாமல் அவரைக் காப்பாற்றுவதற்காகப் பஸ் டிரைவர் உடனடியாக பிரேக் அடித்து ஸ்டீயரிங்கைத் திருப்பியுள்ளார்.
மழையால் சாலை ஈரமாக இருந்ததால் பஸ்ஸின் டயர்கள் சறுக்கி, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. உரசியபடியே பெட்ரோல் பங்கிற்குள் பாய்ந்த அந்த பஸ், அங்கிருந்த சிமெண்ட் தடுப்பில் மோதி நின்றது. இதனால் பெட்ரோல் பங்கில் நின்ற காரும் மற்றொரு ஸ்கூட்டரும் நல்வாய்ப்பாக அசம்பாவிதத்தில் இருந்து தப்பின.
குழந்தைகள், பெண்கள் உட்பட சுமார் 35 பயணிகள் பயணித்த அந்த பஸ்ஸிலிருந்த 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். உள்ளூர் மக்கள் உடனடியாக மீட்புப் பணியில் ஈடுபட்டுப் அனைவரையும் மீட்டுச் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் சேர்த்தனர். அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் உயிரிழப்பு ஏற்படவில்லை.
🚨 KERALA | TOURIST BUS OVERTURNS AFTER SWERVING TO AVOID SCOOTER A tourist bus carrying a wedding party overturned after the driver reportedly swerved to avoid a scooter near Kakkoor in Koothattukulam, Ernakulam, Kerala. The bus lost control and crashed into the side of a… pic.twitter.com/OBvWCm4frU — contentkikamii (@contentkikamii) August 27, 2026 “>
பதறவைக்கும் இந்த முழு விபத்து காட்சிகளும் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. டிரைவரின் சமயோசிதமான நடவடிக்கையும் சிமெண்ட் தடுப்பும் பெரிய பேராபத்தைத் தடுத்துப் பல உயிர்களைக் காத்துள்ளது.
