படிப்பறிவும் பாதுகாப்பும் தேடி ஆதிவாசி பழங்குடியின ஆசிரமப் பள்ளிக்கு வந்த 21 சிறுமிகளுக்கு, உணவருந்தும் இடத்தில் நடந்த கொடூரம் ஒட்டுமொத்த சமூகத்தின் மனசாட்சியையும் உலுக்கியுள்ளது. உணவருந்துவதற்காக வரிசையில் நின்ற பிஞ்சுச் சிறுமிகளிடம் எல்லை மீறி அத்துமீறி நடந்து கொண்ட நபர், தனது காமவெறியை வெளிப்படுத்தி 21 பழங்குடியின பெண் மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்துள்ள சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
கல்வி பயின்று தங்களின் எதிர்காலத்தை ஒளிமயமாக்கிக் கொள்ளலாம் என்ற நம்பிக்கையோடு தங்கிப் படிக்கும் மாணவிகளுக்கு, பாதுகாப்பளிக்கும் இடத்திலேயே இத்தகைய அநீதி இழைக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. உணவு அருந்த வரும் சிறுமிகளிடம் நைஸாகப் பேசி, அவர்களைத் தேவையில்லாத இடங்களில் தொட்டுப் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு வந்துள்ளார் அந்தப் பாவி.
பாதிக்கப்பட்ட சிறுமிகள் தங்கள் பெற்றோர் மற்றும் பள்ளி நிர்வாகத்தின் கவனத்திற்குக் கொண்டு சென்ற பிறகே இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. உடனடியாகக் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, அந்த நபர் மீது கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பிஞ்சு மனங்களில் பெரும் பயத்தையும் வடுவையும் ஏற்படுத்திய இந்தச் சம்பவம் குறித்துக் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பழங்குடியினச் சமூகத்தைச் சேர்ந்த ஏழை எளிய குழந்தைகள் தங்கிப் படிக்கும் ஆசிரமப் பள்ளிகளில் இதுபோன்று நிகழும் பாதுகாப்பு குறைபாடுகள் பெரும் கவலையளிப்பதாகச் சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இந்நிலையில் தவறு செய்த குற்றவாளிக்குக் கடுமையான தண்டனை வழங்கி, இனி எந்தவொரு பள்ளி மாணவிக்கும் இதுபோன்றதொரு துயரம் நேரக் கூடாது என்பதைச் சட்டம் உறுதி செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்குத் தேவையான மனநல ஆலோசனைகளை வழங்கி, அவர்களுக்குத் தகுந்த பாதுகாப்பை அளிக்க வேண்டியது அரசின் தலையாய கடமையாகும்.
