சொந்த தொழில் தொடங்குவதுதான் வாழ்க்கையின் உச்சகட்ட சுதந்திரம் என்றும், 9-to-5 வேலை என்பது ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் நம்மை அடைத்து வைக்கும் கூண்டு என்றும் இன்றைய தலைமுறையினர் தீவிரமாக நம்பி வருகிறார்கள்.

ஆனால், வாழ்க்கையின் அனைத்து கரடுமுரடான பாதைகளையும் கடந்து வந்த 60 வயதான மூத்த ஈ-ரிக்ஷா ஓட்டுநர் ஒருவர், இந்த வழக்கமான பார்வையை முற்றிலும் தலைகீழாக மாற்றி அமைக்கும் ஒரு எதார்த்தமான அனுபவ உண்மையை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

தொழில் முனைவு எனப்படும் சுய தொழில் மீதான மயக்கத்தில் இருக்கும் இளைய சமுதாயத்திற்கு, ஒரு நிறுவனத்தில் நிலையான வேலையில் இருப்பதே மன அமைதிக்கும் நிம்மதியான வாழ்க்கைக்கும் சிறந்தது என்பதைத் தனது சொந்த அனுபவத்தின் மூலம் அவர் சுட்டிக்காட்டியிருப்பது இணையத்தில் பெரிய அளவிலான விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

வியாபாரம் அல்லது சுய தொழில் என்று வரும்போது, நாம் பார்க்கும் வெளிப்படையான லாபத்திற்குப் பின்னால் கட்டுக்கடங்காத பொறுப்புகளும், கணிக்க முடியாத மன அழுத்தமும் ஒளிந்திருக்கின்றன என்பதை அந்த முதியவர் மிகத் தெளிவாக விளக்குகிறார்.

ஒரு தொழிலை நடத்தும் நபர், நிறுவனத்தின் லாப நஷ்டங்களுக்கு மட்டுமின்றி, வாடிக்கையாளர்களின் தேவைகள், சந்தை ஏற்ற இறக்கங்கள், முதலீட்டு அபாயங்கள் எனப் பல கோணங்களில் 24 மணி நேரமும் சிந்திக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படுகிறார்.

மாறாக, 9-to-5 வேலையில் இருக்கும் ஒரு தொழிலாளிக்குத் தனது பணி நேரம் முடிந்ததும் பணி சார்ந்த சுமை முடிவுக்கு வந்துவிடுகிறது; அவர் மாதாந்திர வருமானத்திற்கு உத்தரவாதம் பெறுவதோடு, குடும்பத்தினருடன் செலவழிக்கப் போதுமான நேரத்தையும், மன அமைதியையும் பெறுகிறார்.

இந்நிலையில் அவர் சுய தொழில் செய்பவர்கள் தங்களை தாங்களே முதலாளி என்று கூறிக்கொண்டாலும், நடைமுறையில் அவர்கள் தங்களின் வாடிக்கையாளர்களுக்கும், சூழ்நிலைகளுக்கும் அடிமையாகிவிடும் நிலமையே உருவாகிறது.

எந்த நேரத்திலும் எதுவும் மாறலாம் என்ற பயத்துடனேயே ஒவ்வொரு நாளையும் கடக்க வேண்டியிருக்கும் சூழலில், 9-to-5 வேலை வழங்கும் நிலையான வாழ்க்கை முறை என்பது குறைத்து மதிப்பிட முடியாத ஒரு வரம் என்பதை அவர் அடிக்கோடிட்டுக் காட்டுகிறார்.

பல ஆண்டுகள் களத்தில் உழைத்து அனுபவம் பெற்ற ஒரு மூத்த மனிதரின் இந்த யதார்த்தமான உரை, தொழிலதிபராக வேண்டும் என்ற கனவோடு மட்டும் ஓடாமல், வாழ்க்கையின் அமைதியையும் நிலைத்தன்மையையும் சீர்தூக்கிப் பார்க்க வேண்டியதன் அவசியத்தை இன்றைய இளைஞர்களுக்கு ஆழமாக உணர்த்தியுள்ளது.

“>