பிரபல சமூக வலைதள உள்ளடக்க உருவாக்குநர் அகில் என்.ஆர்.டி-யின் மனைவியான மேகா நாயர், தனியார் பேருந்து ஓட்டுநர் அனூபுடன் வீட்டைவிட்டுச் சென்றது குறித்து நாட்களாக நிலவி வந்த சர்ச்சைகளுக்கு இறுதியாகத்  பதிலளித்துள்ளார். அகிலின் வீடியோக்களில் தொடர்ச்சியாகத் தோன்றி வந்த இந்தத் தம்பதியினர் திடீரென அமைதி காத்ததுடன், தங்களது இன்ஸ்டாகிராம் பக்கங்களிலிருந்து தங்களது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை நீக்கியதும் இணையத்தில் பலத்த சந்தேகங்களையும் ஊகங்களையும் கிளப்பியிருந்தது.

சமூக வலைதளங்களில் எழுந்த பல்வேறு கேள்விகளுக்கும் வதடிகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் மேகா நாயர் தனது புதிய பதிவின் மூலம் விளக்கமளித்துள்ளார். தான் தன் கணவரின் வீட்டைவிட்டு அனூபுடன் சென்றதை வெளிப்படையாக ஒப்புக்கொண்ட அவர், அவரைப் பாதியில் கைவிட்டுவிட்டு வருவதற்காகத் தான் செல்லவில்லை என்றும், அகிலை விட்டுப் பிரிவதற்குத் தனக்கென சில தனிப்பட்ட காரணங்கள் உள்ளதாகவும், அதனைப் பொதுவெளியில் வெளிப்படுத்த முடியாது எனவும் தெளிவுபடுத்தியுள்ளார்.

 மேலும், வீட்டை விட்டு வெளியேறும் போது தங்கம் மற்றும் விலைமதிப்ப்பான நகைகள் எவற்றையும் தான் எடுத்துச் செல்லவில்லை என்றும், தனது சொந்தப் பொருட்களை மட்டுமே எடுத்துக்கொண்டு நகைகளைத் திருப்பித் தந்துவிட்டதாகவும் அவர் மறுத்துள்ளார்.

தான் வீட்டைவிட்டு வெளியேறிய பிறகு பத்து நாட்கள் அனூப்பின் வீட்டில் தங்கியிருந்ததாகவும், அந்த இடைப்பட்ட காலத்தில் தனது தந்தையைச் சந்தித்துவிட்டு மீண்டும் அனூப்பின் இல்லத்திற்கே திரும்பியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதுமட்டுமின்றி, தாங்கள் இருவரும் ஒருவருக்கொருவர் பொதுவெளியில் குற்றச்சாட்டுகளை முன்வைப்பதில்லை என ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளதாகவும், நண்பர்கள் என்ற பெயரில் வெளியாகும் தகவல்களை மக்கள் நம்ப வேண்டாம் எனவும் மேகா நாயர் கேட்டுக்கொண்டுள்ளார்.