டெல்லியில் மென்பொருள் பொறியாளர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த வழக்கில், நெஞ்சை உரைய வைக்கும் கொடூரமான உண்மைகள் ஒவ்வொன்றாக வெளிச்சத்திற்கு வந்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
மேலும் தனது சொந்த வீட்டிலேயே பெற்ற தாயின் கண்முன்னே அந்த இளைஞர் மிகக் கொடூரமாகத் தாக்கப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம், ஒட்டுமொத்தத் தலைநகரையே உறைய வைத்துள்ளது. சட்டத்தையும் குடும்ப அமைப்பையும் உலுக்கியுள்ள இந்தச் சம்பவத்தின் பின்னணியில் அரங்கேறியுள்ள திட்டமிடப்பட்ட அராஜகங்கள், கேட்கும் ஒவ்வொருவரையும் பதற வைக்கின்றன.
இந்தத் தாக்குதலின் போது வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை அந்த இளைஞரின் மனைவியே முன்னதாகவே அணைத்து வைத்த அதிர்ச்சித் தகவலும் விசாரணையில் தெரியவந்துள்ளது. குற்றத்தைச் செய்வதற்கு முன்பாகவே எந்தவிதத் தடயமும் சிக்கிவிடக் கூடாது என்பதில் மிகத் தெளிவாகத் இருந்துள்ளார்.
இதனால் திட்டமிட்டுச் செயல்பட்ட அந்தப் பெண், தன் கணவன் தன் தாயின் கண்முன்னே கொடூரமாக அடித்துத் துன்புறுத்தப்பட்ட போதும் சற்றும் இரக்கமின்றி நடந்துகொண்டதாகக் கூறப்படுகிறது. பெற்ற தாயின் கதறலையும் அலறலையும் பொருட்படுத்தாமல் அரங்கேற்றப்பட்ட இந்த வன்முறை, இறுதியாக அந்த இளைஞரின் பரிதாபச் போய் முடிந்துள்ளது.
தற்போது இந்தச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், கொடூரக் கொலையில் தொடர்புடைய மனைவி மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த நபர்கள் மீது தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரு சாப்ட்வேர் இன்ஜினியரின் வாழ்க்கை அவரது சொந்த வீட்டிலேயே, மனைவியின் சதித்திட்டத்தால் இப்படிப் பரிதாபமாக முடிந்திருப்பது சமூக வலைதளங்களிலும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாசமும் நம்பிக்கையும் இருக்க வேண்டிய குடும்ப உறவுகளுக்குள்ளேயே இத்தகைய கொடூரமான வன்முறைகளும் திட்டமிட்ட குற்றங்களும் நுழைந்திருப்பது, இன்றைய சமூகத்தின் மீதான பெரும் அச்சத்தையும் கவலையையும் அதிகரிக்கச் செய்துள்ளது.
