கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள பொதிநாயனப்பள்ளி பகுதியில் சுமார் 30 கோடி ரூபாய் சந்தை மதிப்புள்ள 15 ஏக்கர் அரசுப் புறம்போக்கு நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுப் பட்டா மாற்றப்பட்ட விவகாரம் தற்போது பூதாகரமாக வெடித்துள்ளது. முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில் உண்மை கண்டறியும் குழுவின் தலைவராகப் பொறுப்பு வகித்து, மாதந்தோறும் அரசு நிதியிலிருந்து சம்பளம் பெற்று வந்த அயன் கார்த்திகேயன், தனது நண்பருடன் இணைந்து இந்தச் செயலில் ஈடுபட்டுள்ளதாக ஆதாரங்களுடன் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அரசுக்குச் சொந்தமான கோடிக்கணக்கான மதிப்பிலான நிலத்தைத் திட்டமிட்டுத் தங்கள் பெயருக்கு மாற்றிய இந்த முறைகேடு அரசியல் வட்டட்டத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரத்தில் தற்போது உறுதியான ஆதாரங்கள் சிக்கியுள்ளதால், அயன் கார்த்திகேயன் மீது மிக விரைவில் கடுமையான சட்டபூர்வமான கைது நடவடிக்கைகள் பாயக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

“>

 

மேலும், ஆக்கிரமிக்கப்பட்டுள்ள அந்த 15 ஏக்கர் அரசுப் புறம்போக்கு நிலம் விரைவில் முழுமையாக மீட்கப்படும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.