ஆந்திர மாநிலம் ஓங்கோலில் மின்தூக்கி பழுது காரணமாக நிகழ்ந்த விபத்தில் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஓங்கோலில் உள்ள சூரியா டவர்ஸ் கட்டடத்தில், வனிதா (50) என்ற பெண் தனது மகள் மற்றும் பேரனுடன் மின்தூக்கியில் ஏறியுள்ளார்.
மகளும் பேரனும் வெளியேறிய நிலையில், வனிதா வெளியேற முயன்றபோது கதவு திறந்திருந்த நிலையிலேயே மின்தூக்கி திடீரென கீழே இறங்கியுள்ளது.
நகர்ந்து கொண்டிருந்த மின்தூக்கியில் இருந்து வெளியேற முயன்றபோது அவர் சிக்கிக்கொண்டு படுகாயமடைந்தார். உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
A horrifying lift accident in Ongole has claimed the life of a 50-year-old woman after an elevator at Surya Towers allegedly moved down suddenly with its door open, leaving her with little time to react.
The incident, which occurred on Sunday, has raised serious questions over… pic.twitter.com/2KqtmYPynY
— Hate Detector 🔍 (@HateDetectors) August 20, 2026
“>
இந்த விபத்தின் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், கட்டடங்களில் உள்ள மின்தூக்கிகளின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு குறித்து பொதுமக்கள் மத்தியில் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
