கிரிக்கெட் களத்தில் மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தும் நியூசிலாந்து அணி, நிதி ரீதியாகப் பெரும் சரிவை சந்தித்து வருகிறது. கடந்த நிதியாண்டில் அந்த நாட்டின் கிரிக்கெட் வாரியத்திற்குச் சுமார் 7.3 மில்லியன் டாலர் அதாவது இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட 70 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் தங்களது நஷ்டம் 1.8 மில்லியன் டாலராக மட்டுமே இருக்கும் என்று எதிர்பார்த்தது. ஆனால், அது திட்டமிட்டதை விட ஏழு மடங்கு அதிகமாக உயர்ந்துவிட்டது. இந்தியாவின் சூதாட்டச் சட்டங்களில் கொண்டுவரப்பட்ட புதிய மாற்றங்களால், அவர்களின் முக்கிய Sponsor நிறுவனமான ‘டிரீம் 11’ உடனான ஒப்பந்தத்தில் ஏற்பட்ட மாற்றமே இந்தச் சரிவுக்கு முக்கியக் காரணம் என்று நியூசிலாந்து வாரியம் தெரிவித்துள்ளது.

இந்த நிதி நெருக்கடியிலிருந்து மீண்டு வர, நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் தற்போது முழுமையாக இந்திய அணியின் சுற்றுப்பயணத்தையே நம்பியுள்ளது. வரும் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்துக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மொத்தம் 12 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இந்தத் தொடரின் மூலம் அந்த வாரியம் சுமார் 100 கோடி ரூபாய் வரை வருவாய் ஈட்ட முடியும் என்று பெரிதும் எதிர்பார்க்கிறது.

இந்திய அணி நியூசிலாந்தில் 5 டி20, 5 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. அதற்கான விவரங்கள்:

டி20 தொடர்:

1-வது டி20: அக்டோபர் 22

2-வது டி20: அக்டோபர் 24

3-வது டி20: அக்டோபர் 27 –

4-வது டி20: அக்டோபர் 30

5-வது டி20: நவம்பர் 1

ஒருநாள் தொடர்:

1-வது ஒருநாள்: நவம்பர் 4

2-வது ஒருநாள்: நவம்பர் 7

3-வது ஒருநாள்: நவம்பர் 10

4-வது ஒருநாள்: நவம்பர் 13

5-வது ஒருநாள்: நவம்பர் 15

டெஸ்ட் தொடர்:

1-வது டெஸ்ட்: நவம்பர் 19

2-வது டெஸ்ட்: நவம்பர் 27

இந்த டெஸ்ட் தொடர் இந்திய அணிக்கு மிகவும் முக்கியமானதாகும். உலக டெஸ்ட் சாம்பியன்ஷி இறுதிப் போட்டிக்குச் செல்ல வேண்டுமென்றால், இந்திய அணி இந்தத் தொடரில் சிறப்பாகச் செயல்பட வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. சொந்த மண்ணில் நியூசிலாந்தை வீழ்த்துவது எந்த அணிக்கும் எளிதான காரியமன்று என்பதால், இந்தச் சுற்றுப்பயணம் கிரிக்கெட் உலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.