இன்றைய நவீன வாழ்க்கை முறையில் நாற்காலியில் பல மணி நேரம் தொடர்ந்து அமர்ந்து பணியாற்றுவது உடல் எடையை அதிகரிப்பதோடு, இடுப்பு மற்றும் வயிறு சுற்றியுள்ள பகுதிகளில் கொழுப்பு சேர வழிவகுக்கிறது. இது இதய நோய் உள்ளிட்ட பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளுக்குக் காரணமாகலாம். இந்தச் சிக்கலுக்குத் தீர்வு காணும் வகையில், பிரபல உடற்பயிற்சி நிபுணர் பிரபல் சர்மா ஒரு வாராந்திர உடற்பயிற்சி அட்டவணையை வெளியிட்டுள்ளார்.
இன்லைன் டம்பில் பெஞ்ச் பிரஸ் மற்றும் வைடு கிரிப் கேபிள் ரோஸ் பயிற்சிகளுடன் தொடங்கி, மெஷின் பிளைஸ், ஸ்ட்ரைட் ஆர்ம் புல்டவுன்ஸ், டம்பில் லேட்டரல் ரெய்சுகள், கேபிள் ஃபேஸ் புல்ஸ், மற்றும் கை தசைகளுக்கான பைசெப் கர்ல்ஸ், ஸ்கல் க்ரஷர்ஸ் ஆகியவை இடம்பெறுகின்றன.
மெஷின் ஹிப் அபுடக்டர், டெட்லிஃப்ட்ஸ், லெக் பிரஸ், லெக் எக்ஸ்டன்ஷன்ஸ், ஹாம்ஸ்ட்ரிங் கர்ல்ஸ், ஸ்டாண்டிங் காஃப் ரெய்சுகள் மற்றும் கேபிள் க்ரன்சுகள் மூலம் செவ்வாய்க்கிழமை பயிற்சி நிறைவடைகிறது.
மார்பகம், தோள்பட்டை மற்றும் ட்ரைசெப்ஸ் தசைகளை இலக்காகக் கொண்டு, இன்லைன் டம்பில் பெஞ்ச் பிரஸ், பெக் பிளைஸ், லேட்டரல் ரெய்சுகள், ஷோல்டர் பிரஸ் மற்றும் ஓவர்ஹெட் ரோப் எக்ஸ்டன்ஷன்ஸ் செய்யப்படுகின்றன.முதுகு, தோள்பட்டை மற்றும் பைசெப்ஸ் தசைகளுக்காக செஸ்ட் சப்போர்ட்டட் பெண்ட் ஓவர் ரோ, லேட் புல்டவுன்ஸ், ரிவர்ஸ் பிளைஸ், ப்ரீச்சர் கர்ல்ஸ் மற்றும் கை மணிக்கட்டுக்கான பயிற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. செவ்வாய்க்கிழமை போன்றே கால் பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும், லெக் பிரஸுக்குப் பதிலாக ஸ்காட்ஸ் பயிற்சி பரிந்துரைக்கப்படுகிறது.
&
View this post on Instagram
“>nbsp;
ஒவ்வொரு பயிற்சியையும் 8 முதல் 12 முறை செய்ய வேண்டும். எடையை உடனடியாக மாற்றாமல், அதே எடையுடன் செய்து அனைத்து செட்களிலும் 12 முறைகளைச் செய்ய முடியும் என்ற நிலையை எட்ட வேண்டும். அந்த இலக்கை எளிதாக அடைந்த பிறகு மட்டுமே எடையை உயர்த்த வேண்டும் என்று நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர். சீரான உடற்பயிற்சியும் தொடர்ச்சியும் மட்டுமே ஆரோக்கியமான உடல் அமைப்பைப் பெற உதவும்.
