திருமணம் என்பது இரு மனங்கள் மட்டுமின்றி, இரு குடும்பங்கள் இணையும் புனிதமான பந்தமாகப் பார்க்கப்படுகிறது. ஆனால், அண்மைக்காலமாகத் திருமணத்திற்கு முன்பாக உண்மைத் தன்மையை மறைத்து, போலி கௌரவத்திற்காகவோ அல்லது குடும்ப வற்புறுத்தலாலோ செய்யப்படும் திருமணங்கள், பலரின் வாழ்க்கையைக் கேள்விக்குறியாக்கி வருகின்றன.

அந்த வகையில், திருமணமான முதல் இரவிலேயே மனைவியின் வாயிலாக வெளிவந்த திடுக்கிடும் உண்மையும், அதனைத் தொடர்ந்து கணவர் சந்தித்த சொல்லொணா மன உழைச்சலும் தொடர்பான சம்பவம் ஒன்று இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

திருமணம் முடிந்து முதலிரவு அறையில் கணவருக்காகக் காத்திருந்த பெண், தன்னிடம் இயல்பாகப் பேச முற்பட்ட கணவரிடம், “எனக்குச் உடலுறவில் ஈடுபாடு இல்லை, இந்தத் திருமணத்தில் எனக்கு விருப்பமும் இல்லை” என்ற அதிர வைக்கும் உண்மையை உடைத்துள்ளார். இதனால் பேரதிர்ச்சியும் ஏமாற்றமும் அடைந்த அந்த நபர், உடனடியாகத் தனது குடும்பத்தாரிடம் நிலைமையை எடுத்துக் கூறி, முறைப்படி சட்டப்பூர்வமாக விவாகரத்து பெற முடிவு செய்தார்.

ஆனால், தப்பெண்ணங்கள் மற்றும் முறையான புரிதல் இல்லாததால் இந்த விவகாரம் நீதிமன்றப் படி ஏற வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டது. முறையான தாம்பத்திய உறவோ அல்லது மன ஒத்துப் போதலோ இல்லாத இந்தத் திருமண பந்தத்திலிருந்து முறைப்படி விடுபடுவதற்காக, அந்த நபர் சுமார் 10 லட்சம் ரூபாய் வரை செலவு செய்ய வேண்டிய சூழல் உருவானது.

இதனால் பல ஆண்டு கால மன உழைச்சல், சட்டப் போராட்டங்கள் மற்றும் பெருந்தொகை விரயத்திற்குப் பிறகு இறுதியாக அவருக்கு நீதிமன்றம் மூலம் விவாகரத்து கிடைத்துள்ளது. திருமணத்திற்கு முன்பே தங்களின் விருப்பங்களையும் இயல்புகளையும் வெளிப்படையாகப் பேசாமல் மறைப்பதால், இரு குடும்பங்களின் நிம்மதியும், பல லட்சக்கணக்கான பணமும் எவ்வாறு வீணாகிறது என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு தற்போதைய சான்றாக மாறியுள்ளது.