இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்களிலும் சமூக வலைதளங்களிலும் பரவும் போலி தகவல்களை நம்பி, குறுக்கு வழியில் கோடீஸ்வரனாக ஆசைப்பட்டு 16 வயது சிறுவனைக் கொடூரமாகக் கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
ஆண்களின் விரைப்பையை விற்றால் கோடிக்கணக்கில் பணம் சம்பாதிக்கலாம் என்ற தவறான வீடியோவை சோஷியல் மீடியாவில் பார்த்த சில நபர்கள், சட்டென்று பணக்காரனாக வேண்டும் என்ற பேராசையில் இந்த விபரீத முடிவை எடுத்துள்ளனர். இந்த ஆசைக்காகத் தங்கள் பகுதியில் இருந்த ஒரு அப்பாவி 16 வயது சிறுவனைக் கடத்திச் சென்று, கொடூரமான முறையில் கொலை செய்து அவனது உடற்பகுதியை அறுத்து எடுத்துள்ளனர்.
கொலை செய்த பிறகுதான் அந்த கொடூர கும்பலுக்குப் மிகப்பெரிய ஏமாற்றமும் அதிர்ச்சியும் காத்திருந்தது. தாங்கள் அறுத்தெடுத்த அந்த உடற்பகுதியை வாங்குவதற்கு சந்தையில் எந்தவொரு வாடிக்கையாளரோ அல்லது மருத்துவ அமைப்போ முன்வரவில்லை.
சமூக வலைதளங்களில் பார்த்தது வெறும் கட்டுக்கதை மற்றும் போலி வதந்தி என்பதை உணர்ந்த அந்த கும்பல், வாங்குபவர் யாரும் கிடைக்காததால் செய்வதறியாது திகைத்துப்போனது. இறுதியில், மாட்டிய உடலை என்ன செய்வதென்று தெரியாமல், தடயங்களை மறைப்பதற்காகச் சிறுவனின் சடலத்தை ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் வீசி எறிந்துவிட்டுத் தப்பியோடிவிட்டனர்.
சிறுவன் காணாமல் போனது குறித்து வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்திய காவல் துறையினர், சந்தேகத்தின் பேரில் சிலரைக் பிடித்து விசாரணை நடத்தினர். போலிஸாரின் கெடுபிடி விசாரணையில், இணையத்து வதந்தியை நம்பி கோடீஸ்வரனாக ஆசைப்பட்டுச் சிறுவனைக் கொடூரமாகக் கொலை செய்த திடுக்கிடும் உண்மையை குற்றவாளிகள் ஒப்புக்கொண்டனர்.
சோஷியல் மீடியாவில் பரவும் ஆபத்தான போலி தகவல்கள் இளைஞர்களின் மனதை எந்த அளவிற்குச் சீரழித்துக் குற்றச்செயல்களில் ஈடுபட வைக்கிறது என்பதற்கு இந்தச் சம்பவமே சாட்சியாக அமைந்துள்ளது. இக்கொடூரச் சம்பவத்தில் ஈடுபட்ட அனைவரையும் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
