சிறப்பாகச் செயல்பட்ட நகராட்சிகளுக்கான மாநில அளவிலான தரவரிசையில், போடிநாயக்கனூர் நகராட்சி முதலிடத்தைப் பிடித்துச் சாதனை படைத்துள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள நகராட்சிகளின் செயல்பாடுகள் மற்றும் வளர்ச்சிப் பணிகளை அடிப்படையாகக் கொண்டு வெளியிடப்பட்ட மதிப்பீட்டில், போடிநாயக்கனூர் நகராட்சி ஒட்டுமொத்தமாக முதல் இடத்தைத் தட்டிச் சென்றுள்ளது.
போடிநாயக்கனூர் நகராட்சிக்கு இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க அங்கீகாரம் வழங்கப்பட்டதற்குத் தமிழக முதல்வர் தளபதி அவர்களுக்குத் தேனி மாவட்டத் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நெஞ்சார்ந்த நன்றியும் வாழ்த்துகளும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போடி நகரின் பெருமை 🏆
தமிழ்நாட்டிலேயே சிறப்பாக செயல்படும் நகராட்சிகளில் முதல் இடம் பெற்ற போடிநாயக்கனூர் நகராட்சிக்கு வழங்கப்பட்ட விருதுக்கு மனமார்ந்த நன்றிகள்! 💐
இந்த பெருமையை வழங்கிய மாண்புமிகு முதலமைச்சர் தளபதி அவர்களுக்கு,
தமிழக வெற்றிக் கழகம் – தேனி மாவட்டம் சார்பாக… pic.twitter.com/z7GPFHeaDS— Sathya Priya (@itsSathyatheni) August 15, 2026
“>
நகராட்சி நிர்வாகத்தின் சிறப்பான பணிகளாலும் துப்புரவு மற்றும் மக்கள் நலத் திட்டங்களின் செயலாக்கத்தாலும் எட்டப்பட்டுள்ள இந்தச் சாதனைக்குத் தேனி மாவட்ட மக்கள் மற்றும் தவெக தொண்டர்கள் மத்தியில் பெரும் வரவேற்பும் மகிழ்ச்சியும் நிலவி வருகிறது.
