மனித உறவுகளுக்குக் கண்டங்களோ, மொழியோ, கலாச்சார எல்லைகளோ ஒரு தடடையே இல்லை என்பதை உணர்த்தும் பல சம்பவங்கள் உலகெங்கிலும் அவ்வப்போது அரங்கேறிக் கொண்டுதான் இருக்கின்றன.
அந்த வகையில், அமெரிக்காவில் வசித்து வந்த இந்தியக் குடும்பம் ஒன்று அங்கிருந்து காலி செய்து கொண்டு கிளம்பும் தருணத்தில், அவர்களது அமெரிக்க அயல்வீட்டுப் பெண்மணி உணர்ச்சிவசப்பட்டு, இந்தியக் குடும்பத்தினரைக் கண்ணீருடன் கட்டிப்பிடித்து விடைபெற்ற நெகிழ்ச்சியான வீடியோ காட்சி, தற்போது இணையதளங்களில் வெளியாகி ஒட்டுமொத்த உலக மக்களின் இதயங்களையும் உருக வைத்துள்ளது.
அமெரிக்கப் பெண்மணி ஒருவர், பல ஆண்டுகளாகத் தன் வீட்டின் அருகில் வசித்து, தங்களுக்கு ஒரு சொந்தக் குடும்பத்தைப் போல உறுதுணையாக இருந்த இந்தியக் குடும்பத்தினர் தங்களை விட்டுப் பிரிகிறார்கள் என்பதைத் தாங்கிக் கொள்ள முடியாமல் கண்ணீர் விட்டுக் கதறிய காண்போரைச் சிலிர்க்க வைத்தது.
அன்பும் உபசரிப்பும் இந்தியர்களின் ரத்தத்திலேயே ஊறிய ஒன்று என்பதை நிரூபிக்கும் வகையில், அந்நிய மண்ணிலும் தங்களது கனிவான பேச்சினாலும், பகிர்ந்து கொண்ட உணவாலும், காட்டிய பேராதரவாலும் அந்த அமெரிக்கப் பெண்மணியின் குடும்பத்தோடு அவர்கள் மிக ஆழமான பிணைப்பை ஏற்படுத்தியுள்ளனர்.
இந்நிலையில் அவர் அந்தப் பெண்மணி இந்தியக் குடும்பத்தினரைக் கட்டியணைத்துத் தனது நன்றியையும் அன்பையும் கண்ணீராக வெளிப்படுத்திய காட்சி, “அன்பிற்கு எல்லை இல்லை” என்பதை உலகிற்கு உரக்கச் சொல்லியிருக்கிறது.
இன்றைய அவசர யுகத்தில் பக்கத்து வீட்டில் யார் வசிக்கிறார்கள் என்பதைக் கூடக் கண்டுகொள்ளாமல் வாழும் மனிதர்களுக்கு மத்தியில், எல்லைகளைத் தாண்டி மலர்ந்த இந்த அழகான அண்டை வீட்டு அன்புச் சங்கிலி, சோசியல் மீடியாவில் வைரலாகி லட்சக்கணக்கான லைக்குகளையும் கருத்துக்களையும் குவித்து வருகிறது.
இந்தியப் பண்பாட்டின் மகத்துவத்தையும், அண்டை வீட்டாரிடம் காட்ட வேண்டிய மனிதநேயத்தையும் பறைசாற்றும் இந்த நெகிழ்ச்சியான சம்பவம், இணையவாசிகளுக்கு ஒரு மாபெரும் நம்பிக்கையையும் புன்னகையையும் பரிசளித்துள்ளது.
