சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் தனது நகைச்சுவையான பேச்சால் மக்களைக் கவர்ந்த அறந்தாங்கி நிஷா, தற்போது சவுதி அரேபியாவிற்குப் பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு சென்று இறங்கியதும் வீசிய கடும் அனல் காற்றை உணர்ந்த அவர், வெளிநாட்டில் வாழும் தொழிலாளர்களின் வாழ்க்கைக் போராட்டத்தைக் கண்டு மிகவும் நெகிழ்ந்துபோயுள்ளார்.

நமது ஊரில் வெயில் அடித்தாலே “ஐயோ வெயில் தாங்க முடியவில்லையே” என்று நாம் புலம்புவது உண்டு. ஆனால், நமது ஊர் வெயிலை விட சவுதியில் மூன்று மடங்கு அதிகமாக வெயில் சுட்டெரிக்கிறது என்றும், இந்தச் கடுமையான சூழலிலும் உழைக்கும் ஆண்கள் அனைவருமே உண்மையான ‘ஆண் தேவதைகள்’ என்றும் அறந்தாங்கி நிஷா மனமாரப் பாராட்டியுள்ளார்.

நாம் ஊரில் சாதாரணமாக நினைத்துச் சாப்பிடும் ஒரு வேளை உணவுகூட, அங்குள்ள வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்குத் தேவாமிர்தமாகத் தான் தெரிகிறது. தங்களின் பசியையும் ஆசைகளையும் தள்ளிவைத்துவிட்டு, குடும்பத்திற்காக அவர்கள் படும் கஷ்டங்களை நேரில் பார்த்தபோது தனக்குக் கண்கள் கலங்கியதாக அவர் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டில் இருக்கும் ஆண்கள் ஒவ்வொரு வேளை சாப்பாட்டிலும் ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் எனச் சிறு தொகையைக் கூட மிச்சம்ப பிடித்துத் தான் ஊரில் உள்ள தங்கள் குடும்பத்திற்கு அனுப்பி வைக்கிறார்கள். அவர்களின் இந்தத் தியாகமும் உழைப்பும் வார்த்தைகளால் விவரிக்க முடியாத ஒன்று என்று அவர் உருக்கமாகக் கூறியுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Aranthai Nisha (@aranthainisha)

“>

கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல், சொந்த பந்தங்களைப் பிரிந்து அயல்நாட்டில் குடும்பத்திற்காக உழைக்கும் அனைத்து வெளிநாட்டு வாழ் இந்தியர்களின் போராட்டத்தையும் தியாகத்தையும் சுட்டிக்காட்டிய அறந்தாங்கி நிஷாவின் இந்த உரை, தற்போது சமூக வலைதளங்களில் பலரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.