கோலாரில் இருந்து பங்கார்பேட்டை நோக்கிச் சென்ற KSRTC பேருந்தில், பெண்ணின் அனுமதியின்றி அவரது கையைத் தொட்டு முத்தமிட்ட முதியவரைப் பெண் பயணியும், சக பயணிகளும் சேர்ந்து கடுமையாகத் தாக்கிய சம்பவம் சமூக வலைதளங்களில் காட்டுத் தீயாய் பரவி பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
KA-51-F-4452 எண் கொண்ட அரசுப் பேருந்தில் பயணித்த முதியவர் ஒருவர், அருகில் அமர்ந்திருந்த பெண்ணின் கையை திடீரெனப் பிடித்து முத்தமிட்டு அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். ஆரம்பத்தில் சில நிமிடங்கள் இதைப் பொறுத்துக்கொண்ட அந்தப் பெண், எல்லை மீறியதால் தனது கோபத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் முதியவரைச் சரமாரியாக அடிக்கத் தொடங்கினார்.
பெண்ணின் சத்தத்தைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சக பயணிகளும் உடனடியாகத் தலையிட்டு அந்த முதியவரை நંந்து கட்டினார்கள். அடி தாங்காமல் கதறிய அந்த முதியவர், “எனக்கும் மனைவியும் குழந்தைகளும் இருக்கிறார்கள், என்னை விட்டுவிடுங்கள்” என்று பொதுமக்களிடம் கைகூப்பி மன்றாடினார்.
சூழ்நிலையின் தீவிரத்தை உணர்ந்துகொண்ட அந்த முதியவர், கூட்ட நெரிசலில் இருந்து தப்பிக்க அந்தப் பெண்ணின் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டார். பின்னர், பேருந்து நின்றவுடன் அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பியோடிவிட்டார். இந்தச் சம்பவத்தின்போது எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன. இருப்பினும், இதுவரை இந்தச் சம்பவம் தொடர்பாகப் பாதிக்கப்பட்ட தரப்பிலிருந்து எத்தகைய புகாரும் அளிக்கப்படவில்லை என்றும், வீடியோ ஆதாரங்களைக் கொண்டு காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருவதாகவும் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
A woman brutally thrashed an elderly man and fellow passengers joined in after he allegedly touched and kissed her hand without consent on a KSRTC bus travelling from Kolar to Bangarpet.
The man later pleaded for mercy, touched her feet in apology, and fled the spot.
The… pic.twitter.com/KqbFtQzyez
— Hate Detector 🔍 (@HateDetectors) August 14, 2026
“>
பொதுப் போக்குவரத்தில் நடந்த இந்த அதிரடித் தாக்குதல் மற்றும் பாலியல் அத்துமீறல் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
