திருவள்ளூர் மாவட்டம் பூவிருந்தவல்லியில் இயங்கி வரும் ‘என்ரிகா என்டர்பிரைசஸ்’ நிறுவனத்தின் மதுபான ஆலைகளில் உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணைய அதிகாரிகள் மேற்கொண்ட திடீர் சோதனையில் பெரும் முறைகேடுகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.

இந்நிறுவனம் தயாரிக்கும் 11 வகையான மதுபானங்களில், அனுமதிக்கப்பட்ட அளவை மீறி செயற்கை மற்றும் இயற்கை சாயங்களை ஒத்த சுவையூட்டும் பொருட்கள் சேர்க்கப்படுவது ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தரக்கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறி பொதுமக்களின் உடல்நலத்திற்குத் தீங்கிழைக்கும் வகையில் இந்தத் தயாரிப்புகள் இருந்ததால், உடனடியாக அவற்றின் விற்பனைக்குத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

பிராந்தி மற்றும் ரம் வகைகளைச் சேர்ந்த கீழ்க்கண்ட பிரபல பிராண்டுகளின் விற்பனை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது, வீரன் ஸ்பெஷல் பிராந்தி, வி.எஸ்.ஓ.பி எக்ஷா Gold பிராந்தி, லூயிஸ் வெர்னன் XO பிளெended பிரீமியம் பிராந்தி, மெக்டோவல்ஸ் VSOP பிராந்தி, நம்பர் 1 மெக்டோவல்ஸ் ஃபைன் பிராந்தி,, மென்ஸ்கிப் டீலக்ஸ் பிராந்தி, ஹனி பீ ஃபைன் பிராந்தி, என்ரிகா VSOP செலக்ட் பிராந்தி, என்ரிகா பிளாட்டினம் ரிசர்வ் XO பிராந்தி, என்ரிகா பிரீமியம் பிரெஞ்சு பிராந்தி, என்ரிகா ஓல்டு இண்டீ கிளாசிக் டார்க் ரம்.

“>

 

உணவுப் பாதுகாப்புத்துறையின் இந்த திடீர் அதிரடி நடவடிக்கை மதுபான ஆலை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.