காக்கிரோச் ஜனதா கட்சி (CJP) நிறுவனரான அபிஜித் திಪ್கே (Abhijeet Dipke) மர்மமான பெண் ஒருவருடன் நெருக்கமாக இருக்கும் பழைய புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் மீண்டும் தீயாய் பரவி வருகிறது. எக்ஸ் (X) தளத்தில் வெளியான இந்தத் புகைப்படம் மற்றும் அதன் பின்னணி குறித்து நெட்டிசன்கள் மத்தியில் பெரும் ஆர்வம் எழுந்துள்ளது.
சமூக வலைதளப் பயனரான @aartic02 என்பவர் கடந்த 2024-ஆம் ஆண்டு வெளியிட்ட பிறந்தநாள் வாழ்த்துப் பதிவுதான் இந்தச் சர்ச்சைக்கு முக்கியக் காரணம். அதில், “பிறந்தநாள் வாழ்த்துகள் நண்பரே, பின்னால் நின்று கடினமாக உழைத்து, ஆம் ஆத்மி கட்சியின் சமூக வலைதள வளர்ச்சிக்கு முக்கியக் காரணமாக இருந்தவர்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. லட்சக்கணக்கான பார்வைகளைக் குவிந்த இந்த எக்ஸ் பதிவில் இருந்த பெண் யார் என்ற கேள்வி பலரிடமும் எழுந்தது.
Happy Birthday Dude @abhijeet_dipke
🎂💐🥂
One who worked tirelessly behind the scenes & added the Missing Zing to AAP SM ✌️
Rise & Shine 💥 pic.twitter.com/rZO1n4qdw4— Aarti (@aartic02) September 29, 2024
இதற்கு முன்பாக 2021-ஆம் ஆண்டிலும் இதே பயனர் அபிஜித் தீப்கேவுடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து, “இளம் மற்றும் ஆற்றல்மிகுந்த அபிஜித், உங்களது வருகை சமூக வலைதளத்திற்கு புதிய ஊக்கத்தைக் கொடுத்துள்ளது” என்று பதிவிட்டிருந்தார். அதற்கு அபிஜித் “உங்கள் தொடர்ச்சியான அன்பிற்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி” எனப் பதிலளித்திருந்தார்.
மேலும், அந்தப் பெண் ஹார்ட் எமோஜியுடன் “லவ் யூ” என்று பதிவிட்டிருந்த கமெண்டுகளும் இணையத்தில் வைரலாகின. இவர்களது விவகாரம் குறித்து அதிகாரப்பூர்வமான காதல் தகவல் எதுவும் உறுதிப்படுத்தப்படவில்லை என்றாலும், இவர்களின் புகைப்படங்கள் இருவருக்கும் இடையேயான நெருக்கமான நட்பையும் பிணைப்பையும் வெளிப்படுத்துவதாக நெட்டிசன்கள் பேசி வருகின்றனர்.
सोशल मीडिया पर भी लड़ा गया पंजाब चुनाव
Huge Thanks to Every Social Media Volunteer from India to Abroad for your Priceless Contribution to strengthen the presence of AAP !
From ;
Together We Can to We Did it 🤟❤️pic.twitter.com/WBAlBhNSyi— Aarti (@aartic02) March 19, 2022
வைரலான அந்தப் பெண்ணின் சுயவிவரத்தில் எந்தத் தகவலும் இல்லாத நிலையில், பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு NDTV நடத்திய பழைய நேர்காணல் ஒன்றின் மூலமாக அவரது உண்மையான அடையாளம் வெளிச்சத்திற்கு வந்தது. அவர்தான் ஆர்த்தி என்பதும் இவர் ஆம் ஆத்மி கட்சியின் அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பிரிவில் முக்கிய உறுப்பினராகப் பணியாற்றியவர் என்பது தெரியவந்துள்ளது.
அபிஜித் திப்கேவைப் பொறுத்தவரை, அவர் கடந்த 2020 முதல் 2023 வரை அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியின் சமூக வலைதள மற்றும் தேர்தல் பிரச்சார வியூகங்களில் முக்கியப் பங்காற்றியவர். குறிப்பாக 2020-ஆம் ஆண்டு மீம்ஸ்கள் மூலமாக டிஜிட்டல் பிரச்சாரத்தை முன்னெடுத்து, இளைஞர்களைக் கவர்வதில் முக்கியப் பங்காற்றியதன் மூலம் பரவலாக அறியப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
