இன்றைய நவீன காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் எத்தனையோ விதமான வீடியோக்கள் தினந்தோறும் வைரலாகி வருகின்றன. அதில் சில வீடியோக்கள் நம்மைச் சிரிக்க வைப்பதாகவும், சில ஆச்சரியப்பட வைப்பதாகவும் இருக்கும். ஆனால், தற்போது இணையத்தில் காட்டுத்தீ போல பரவி வரும் ஒரு வீடியோ, சிரிப்புடன் சேர்த்து மனிதர்களுக்கு ஒரு மிரட்டலான விழிப்புணர்வையும் தந்துள்ளது பலரையும் ஈர்த்துள்ளது.

பொதுவாகவே பொது இடங்கள், அலுவலகங்கள் மற்றும் வணிக வளாகங்களில் சிகரெட் மற்றும் புகையிலைப் பொருட்கள் பிடிக்கக் கடுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது. புகைப்பிடிப்பவர்களுக்காக மட்டும் சில இடங்களில் பிரத்யேகமான தனி இடங்கள்  ஒதுக்கப்பட்டிருக்கும். அப்படிப்பட்ட ஒரு குறிப்பிட்ட புகைப்பிடிக்கும் அறைக்குச் சென்றுள்ளார் ஒரு வாலிபர்.

https://www.instagram.com/reel/Db1McpGSNDN/?igsh=Mm56eGxlOHB0bWdv

அமைதியாக அந்த இடத்தில் அமர்ந்து சிகரெட் குடித்துக் கொண்டிருந்த அவர், சாவகாசமாகத் தன் தலையை நிமிர்த்தி மேலே உற்றுப் பார்த்துள்ளார். அந்த நொடியே அவருடைய ஒட்டுமொத்த ரத்தமும் உறைந்துபோகும் அளவுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. மேலே கூரையைப் பார்த்தால், அங்கு வரையப்பட்டிருந்த ஒரு தத்ரூபமான ஓவியம் அவரை நடுங்க வைத்துவிட்டது.

மனிதர் இறந்த பிறகு கல்லறையில் அடக்கம் செய்யப்படும்போது, உறவினர்கள் வந்து நின்று இறுதிச் சடங்குகள் செய்து, ஆன்மா சாந்தியடையப் பிரார்த்தனை செய்வது போன்ற ஒரு காட்சி அந்த ஓவியத்தில் தத்ரூபமாக வரையப்பட்டிருந்தது. சரியாக அந்த வாலிபர் அமர்ந்திருக்கும் இடத்திற்கு நேர் மேலே அந்தப் புகைப்படம் இருந்ததால், பார்ப்பதற்குத் தான் ஏதோ நள்ளிரவில் ஒரு உண்மையான கல்லறைக்குள் மாட்டிக்கொண்டது போன்ற ஒரு மரண பயத்தையும் பிம்பத்தையும் அது ஏற்படுத்தியது.

தனக்கு மேலே தெரிந்த அந்த இறுதிச் சடட்டுக் காட்சியைப் பார்த்ததும், பதறிப்போன அந்த வாலிபர், “ஐயோ, நாம் இறந்துவிட்டோமோ அல்லது கல்லறைக்குள் வந்துவிட்டோமோ?” என்று ஒரு நிமிடம் குழம்பிப் போய் மிரண்டு போயுள்ளார். அடுத்த நொடியே தனது கையில் இருந்த சிகரெட்டைப் பயத்துடனே சட்டென்று அணைத்துவிட்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.

தற்போது இந்தச் சுவாரசியமான மற்றும் திகிலான வீடியோ சமூக வலைதளங்களில் சூடுபிடித்து வைரலாகி வருகிறது. இதைப் பார்க்கும் நெட்டிசன்கள் பலரும் தங்களது கமெண்ட்களைத் தெரிவித்து வருவதோடு, புகைப்பிடிக்கும் பழக்கத்தைக் கைவிட வைக்க இதுபோல வித்தியாசமான முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்துவது மிகச் சிறப்பு என்று அந்த இடத்தின் நிர்வாகத்தினரைப் பாராட்டி வருகின்றனர்.