26 வயது நிரம்பிய ‘ஜேசோ’ (Jaso) என்ற இளம் கோடீஸ்வர தொழிலதிபர், தன்னை முழுமையாக ஒரு நாயைப் போல மாற்றிக் கொள்வதற்காக மில்லியன் கணக்கான டாலர்களைச் செலவிட்டுள்ளதாக ஒரு அதிர்ச்சித் தகவல் சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது. இதனுடன் தொடர்புடைய வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி, உலகளவில் நெட்டிசன்கள் இடையே பெரும் விவாதத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
பரவி வரும் அந்தச் செய்தியின்படி, அந்த வாலிபர் ஒரு நாயைப் போல நடப்பதற்கும், காண்பதற்கும், வாழ்வதற்கும் ஏதுவாகத் தனது தோற்றத்தையும் உடலமைப்பையும் மாற்றிக் கொள்ளப் பல பணிகளைச் செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது. இதற்காக அவர் மில்லியன் கணக்கில் பணத்தை வார இறைத்துள்ளதாக அந்த வைரல் பதிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இச்செய்தி இணையத்தில் பரவியதைத் தொடர்ந்து, நெட்டிசன்கள் பலரும் தங்களது கலவையான கருத்துக்களைப் பதிவு செய்து வருகின்றனர். சிலர் இது அவருடைய தனிப்பட்ட விருப்பம் என்று கூறியபோதிலும், பெரும்பாலான மக்கள் பணத்தை வைத்துக்கொண்டு இப்படியா ஒரு விபரீதமான முடிவை எடுப்பது எனக் கடும் கண்டனங்களையும் அதிர்ச்சியையும் தெரிவித்து வருகின்றனர்.
இருப்பினும், இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த அதிர்ச்சி வீடியோ உண்மையான நிகழ்வு அல்ல; இது செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
